பிரதமர் லீ: பலதரப்பு ஒத்துழைப்புடன் இருநாட்டு உறவுகளை விரிவாக்கவேண்டும்

அனைவருக்கும் பலனளிக்கும் பலதரப்பு உறவுகொண்ட அமைப்பு முறை இருப்பதே சாலச் சிறந்தது என்றாலும் பெரிய நாடுகளுக்கு மத்தியிலான பூசல்களால் அத்தகைய ஒத்துழைப்பு பாதிக்கப்படுகிறது. ஆக, இணைந்து பணியாற்றக்கூடிய நாடுகளுடன் நட்புறவை விரிவாக்கி இருநாடுகளுக்கும் பலன் தரும் அம்சங்களில் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் அனைவரும் பலன் பெற வாய்ப்புகள் உண்டு என்றும் ஒட்டுமொத்த பலனையும் அனைவரும் பகிரமுடியும் என்ற பிரதமர், நம்பிக்கையும் நல்லெண்ணமும் இல்லையென்றாலோ ஒருவருக்கொருவர் சண்டையிட்டாலோ பலதரப்பு ஒத்துழைப்பு ஏற்படுவது கடினமாகும் என்றார்.

அத்தகைய சூழலில் முதலில் எஞ்சியுள்ள பலதரப்பு அமைப்பைப் பாதுகாத்து மேலும் வலுவிழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களைப் பிரதமர் லீ சந்தித்தார்.

தற்போதைய சூழலில் புத்தாக்கமான செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தில் எத்தகைய அம்சங்களில் விரைவாகச் செயல்பட முடியும் என்பதை அறியக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் சொன்னார்.

மின்னிலக்கப் பங்காளித்துவ உடன்பாடு, அறிவியல், கலாசார ஒத்துழைப்பு என ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையான ஒத்துழைப்பு உள்ளதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர், பிரிட்டனுடன் புதிதாக ஏற்பட்டுள்ள உத்திபூர்வ பங்காளித்துவத்தையும் சுட்டினார்.

“அவர்கள் செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்து ஆர்வமாக உள்ளனர். நாமும் தான். அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதுபோன்ற அடிப்படையில் நாடுகள் இணைந்து பணியாற்றமுடியும்,” என்று பிரிட்டனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் விளக்கினார்.

“அப்படியென்றால் நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்,” என்றும் நினைவூட்டினார்.

இருநாட்டு சந்திப்புகள்

பிரதமர் லீ, ஜி20 மாநாட்டின்போது நடத்திய இருநாட்டுச் சந்திப்புகளில் குறிப்பிட்ட ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து ஆர்வம் மிகுதியாக இருந்ததாகக் கூறினார்.

அத்துடன் இருதரப்புக் கண்ணோட்டங்களைப் பகிர நல்ல வாய்ப்பாக அமைந்ததாகவும் சொன்னார்.

“நமது வட்டாரம் குறித்த அவர்களது பார்வையைப் புரிந்துகொள்ளவும் உலக நடப்புகள் குறித்த நமது பார்வையை அவர்கள் அறிய விருப்பம் கொள்ளவும் இருநாட்டுச் சந்திப்புகள் பலனளிக்கின்றன,” என்றார் திரு லீ.

உலக வர்த்தக நிறுவனம், பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளுடன் சனிக்கிழமை இருதரப்புச் சந்திப்புகளைப் பிரதமர் லீ நடத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வொன் டர் லெயெனைச் சந்தித்துப் பேசினார் திரு லீ.

உலக அரசியல் சூழல் குறித்து இரு தலைவர்கள் கருத்து பரிமாறிக்கொண்டதோடு சட்ட அடிப்படையிலான பலதரப்பு அமைப்பு முறையின் முக்கியத்துவத்தை மறுவுறுதிப்படுத்தினர்.

ஜி20 சந்திப்புகளில் கலந்துகொள்வதால் வழக்கமாகப் பார்க்காத நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு ஏற்படுவதாக திரு லீ பகிர்ந்தார்.

சிறிய நாடாக இருப்பதால் மற்ற நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

நேருக்கு நேர் தலைவர்களைச் சந்தித்து உரையாடுவது இணையவழி சந்திப்புகளில் கிடைக்காத பலனைத் தருகிறது என்று கூறிய அவர், மற்றவரின் மனநிலையையும் உறுதியையும் நேரில் காணமுடியும் என்றார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் புட்டினும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளாததற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என்றாலும் அவர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார் திரு லீ. இருப்பினும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்றார்.

சிக்கலான உலகச் சூழல்

சென்ற ஆண்டும் இவ்வாண்டும் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டை ஒப்பிடுகையில் உலகச் சூழல் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சந்திப்பில் களையப்பட முடியாத வேறுபாடுகள் உண்டு என்றும் அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்.

நிலைத்தன்மையற்ற அனைத்துலகச் சூழலும் அமெரிக்கா- சீனா, ரஷ்யா-உக்ரேன் சச்சரவுகளும் ஜி20க்கு தலைமை வகித்த இந்தியாவின் பணியை மிகவும் கடினமாக்கியது என்றார் பிரதமர் லீ.

குறிப்பாக உக்ரேனில் நிலவும் சூழல் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்தியில் இணக்கம் காண வைத்தது சிரமமானதாக இருந்தது.

அனைவருக்கும் உகந்த வகையில் ஒப்பந்தம் முடிவாகிக் கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தக் கூட்டறிக்கை விரிவான அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான ஒன்று என்று பிரதமர் வர்ணித்தார்.

பெருமளவிலான அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடி கருத்துகள் வெளிப்பட்டதுடன் அதற்கு உகந்த மனநிலையும் உருவானதால் ஜி20 சந்திப்புகள் வெற்றிபெற்றதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!