அமெரிக்கப் பயணிகளுக்கு விசா விண்ணப்ப முறையை எளிதாக்கும் சீனா

பெய்ஜிங்: அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், அமெரிக்க சுற்றுப்பயணிகளுக்கான விசா விண்ணப்ப முறையை சீனா எளிதாக்கும்.

அதன்படி தேவையான ஆவணங்கள் குறைக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கிருமிப்பரவலின்போது ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, பயணத்துறையை மீட்கவும், அதன் பொருளியலை வலுப்படுத்தவும் சீனா அண்மை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சுற்றுப்பயண விசா விண்ணப்பதாரர்கள் இனி விமான நுழைவுச் சீட்டுப் பதிவுகள், ஹோட்டல் பதிவுகள், அழைப்புக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவேண்டியது இல்லை என்று தூதரகத்தின் அறிக்கை தெரிவித்தது.

முன்னதாக, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பேன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து விசா இன்றி சீனாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

விசா இன்றி சீனாவுக்குச் செல்லும் நடைமுறை 12 மாதங்களுக்குத் தொடரும். அந்த ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீனாவில் 15 நாள்கள் வரை தங்கி இருக்கலாம்.

கடந்த நவம்பரில் விசா இல்லாமல் பயணம் செய்யும் தனது கொள்கையை சீனா 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!