மலேசிய பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் மிதமான உள்நாட்டு தேவை தொடரும் என்று மலேசிய மத்திய வங்கி நம்புகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜூலை-செப்டம்பர் காலத்தில் முந்தைய ஆண்டைவிட 3.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மலேசிய பேங் நெகாரா (பிஎன்எம்), புள்ளி விவரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதனை காட்டுகின்றன.

2வது காலாண்டில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத 2.9 விழுக்காடு குறைவான வளர்ச்சி பதிவானது.

அதிலிருந்து பொருளியல் வளர்ச்சி தற்போது மீண்டு பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மிஞ்சியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட முன்கூட்டிய மதிப்பீட்டையொட்டி தற்போது பொருளியல் வளர்ச்சி அமைந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் இலக்கான நான்கு விழுக்காடு பொருளியல் வளர்ச்சியை தற்போதைய வளர்ச்சி தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டின் வலுவான செலவினம், மேம்பட்டு வரும் தொழிலாளர் சந்தை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு காரணமாக இருப்பதாக பேங் நெகராவின் ஆளுநர் ரஷீத் கஃபார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“மலேசியாவின் பொருளியல் அடிப்படைகள் வலுவாக உள்ளன. வளர்ச்சியை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கு அவை ஆதரவாக உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையையும் தாண்டியுள்ளது.

2024ல் பொருளியல் நான்கு விழுக்காடு முதல் ஐந்து விழுக்காடு வரை விரிவடையும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

2022ல் மலேசிய பொருளியல் 8.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதன் பிறகு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ல் பொருளியல் மந்தம் ஏற்பட்டது. அனைத்துலக தேவை குறைந்தது இதற்கு முக்கிய காரணமாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!