தனி நாடுதான் தீர்வு: அமெரிக்கா

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் இஸ்‌ரேலின் நீண்டகாலப் பாதுகாப்புச் சவால்களுக்கும் காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான குறுகிய காலச் சவால்களுக்கும், பாலஸ்தீனத் தனி நாட்டை அமைக்காமல் தீர்வுகாண இயலாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மேத்யூ மில்லர் அவ்வாறு கூறினார்.

வட்டார நாடுகள் இஸ்‌ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கத் தயாராக உள்ள நிலையில், டெல் அவிவிற்கு இதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்காமல் பாலஸ்தீனத் தனி நாடு அமைப்பதற்கு வாஷிங்டனிடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சின் கருத்து வெளியானது.

“ஜோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள வட்டாரம் முழுவதற்குமான பாதுகாப்புக் கட்டுப்பாடு இஸ்‌ரேலின் வசம் இருக்கவேண்டும். இந்த நிபந்தனை கட்டாயம். இது, பாலஸ்தீன இறையாண்மைக்கு எதிராக இருந்தாலும் வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.

இஸ்ரேலுக்கும் அதன் மிகப் பெரிய ஆதரவாளரான அமெரிக்காவிற்கும் இதன் தொடர்பில் இப்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது.

வட்டாரத்தில் நீடித்த அமைதி ஏற்பட, தனி நாடாக பாலஸ்தீனத்தை அறிவிப்பது ஒன்றே சிறந்த வழி என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது.

சென்ற வாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கிற்கு நான்காவது முறையாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் நிபந்தனையை இஸ்‌ரேலுக்கு அவர் எடுத்துரைத்தார்.

இஸ்‌ரேலின் அருகில் உள்ள இதர முஸ்லிம் நாடுகள், போருக்குப் பின் காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும் இஸ்‌ரேலுடன் பொருளியல் ஒருங்கிணைப்பைத் தொடரவும் உறுதியளித்தன. ஆனால் சுதந்திர நாடாக பாலஸ்தீனம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது அந்த நாடுகளின் நிபந்தனை.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனத் தனி நாடு அமைப்பதன் தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு நிலவினாலும் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்று திரு மில்லர் கூறியுள்ளார்.

“அமெரிக்கா இஸ்‌ரேலுக்கு நெருக்குதல் தரவில்லை. அவர்களுக்கான வாய்ப்பை நாங்கள் எடுத்துரைக்கிறோம்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!