காஸாவில் கொடூரம், கடும் சரிவில் சுகாதாரப் பராமரிப்பு: மருத்துவர்கள்

ஐநா, நியூயார்க்: மத்திய கிழக்கின் காஸாவில் சுகாதாரப் பராமரிப்பு கடும் சரிவில் உள்ளதாக அங்கு நிலைமையைப் பார்வையிடச் சென்ற மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இஸ்ரேல் அங்கு மேற்கொண்டு வரும் தாக்குதல் விவரிக்க முடியாத கொடூரச் செயல்களுக்கு வழிவிட்டுள்ளதாக ஐநா ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த அந்த நான்கு மருத்துவர்கள் காஸாவில் உள்ள மருத்துவக் குழுக்களுடன் சுகாதாரப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் 2.3 மில்லியன் மக்களை அவர்கள் இருப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தி உள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் உள்ள பெருவாரியான கட்டடங்களைத் தரைமட்டம் ஆக்கியதுடன் 31,000க்கும் மேற்பட்ட மக்களையும் இஸ்ரேலியத் தாக்குதல் கொன்றிருப்பதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘மெடிக்கல் எய்ட் ஃபார் பாலஸ்டினியன்ஸ்’ என்ற அறநிறுவனத்துடன் தொடர்புடைய டாக்டர் நிக் மெய்னார்ட் என்பவர் ஜனவரி மாதம் காஸாவில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. அங்கு மோசமான தீப்புண் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையை தான் கண்டதாகக் கூறப்படுகிறது. தீக்காயங்களால் முகத்தில் உள்ளிருந்த எலும்புகள் தெரியும் அளவுக்கு அந்தச் சிறுமி இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றிக் கூறும் அந்த மருத்துவர், “அந்தச் சிறுமி பிழைக்க வாய்ப்பில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தச் சிறுமிக்கு வலி நிவாரணியான மோர்ஃபின் கொடுப்பதற்குக் கைவசம் அந்த மருந்தும் இல்லை,” என்று ஐநா நிகழ்ச்சியில் அந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் வேதனையுடன் விளக்கினார்.

“அந்தச் சிறுமி இறப்பது உறுதியானது மட்டுமல்ல, அவர் வேதனையுடன் இறக்க வேண்டியிருக்கும்,” என்று கூறினார்.

மற்றொரு பிள்ளை, ஏழு வயது ஹியாம் அபு கதிர், காஸாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு உடல் முழுவதும் 40 விழுக்காடு தீப்புண்களுடன் கொண்டு வரப்பட்டார். இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அந்தப் பிள்ளையின் தந்தை, சகோதரன் ஆகியோர் கொல்லப்பட்டனர், தாயார் காயமுற்றிருந்ததாகத் தீவிரப் பராமரிப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர் ஸகேர் சாஹ்லுல் தெரிவித்தார்.

பல வாரங்கள் காத்திருந்தபின் அந்தப் பிள்ளை சிகிச்சைக்காக எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லப்பட்ட இரண்டு நாள்களிலேயே அந்தப் பிள்ளை இறந்துவிட்டதாக டாக்டர் ஸகேர் சாஹ்லுல் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!