தந்தையின் கனவை நனவாக்கும் மகன்

தன் தந்தை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இறந்தபின், அவர் வடிவமைத்த சிங்கப்பூர் டீ சட்டைகளை விற்றுவருகிறார் 23 வயது நாச்சியப்பன் லெட்சுமணன்.

தந்தை வழிநடத்திய வியாபாரத்தின் பொறுப்பைத் திடீரென ஏற்கவேண்டிய சூழல் ஏற்பட்டபோதும் கடமை தவறவில்லை இவர்.

இதுவரை 9,000 டீ சட்டைகளை விற்றுள்ள இவர், தற்போது படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருப்பதால் மீதமுள்ள 8000 டீ சட்டைகளைப் பாதி விலையில் விற்றுவருகிறார்.

“முதலில் வெளிநாட்டினருக்கென வியாபாரத்தைத் தொடங்கினோம். ஆனால் சிங்கப்பூரர்களும் இச்சட்டைகளை விரும்பி வாங்குகின்றனர்,” என்றார்.

சிங்கப்பூர்ப் பிரியரான தந்தையே முன்மாதிரி

சிங்கப்பூர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் டீ சட்டைகள் சிங்கப்பூரில் இல்லை எனக் கருதி 2020 ஜனவரியில் ‘ஃப்ளோரா அண்ட் ஃபோனா’ என்ற வணிகத்தைத் தொடங்கினார். படம்: நாச்சியப்பன் லெட்சுமணன்

சொந்தமாக சிங்கப்பூர் டீ சட்டைகளைச் செய்யும் யோசனை, நாச்சியப்பனின் தந்தைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.

திரு லெட்சுமணனுக்கு வரலாறு மீதும் கலாசாரத்தில் மீதும் அதிக நாட்டம். கணக்காளர் பணிக்கு அப்பால் ஓர் அருங்காட்சியக வரலாற்றாசிரியராக, சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இந்திய சமூகங்களைப் பற்றி காட்சிக்கூடங்கள் அமைத்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற தொலைக்காட்சித் தொடருக்காகவும் தேக்கா மற்றும் முக்கிய சிங்கப்பூர் சாலைகள் பற்றிய நிகழ்ச்சிகளுக்கும் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார்.

பல நாடுகளுக்குச் சென்றுள்ள அவர், மற்ற நாடுகளில் கண்ட தனித்துவமிக்க சுற்றுப்பயண டீ சட்டைகளைக் கண்டு வியந்து போனார்.

அவ்வாறு நம் நாட்டிலும் உருவாக்க விரும்பிய அவர், 2020 ஜனவரியில் ‘ஃப்ளோரா அண்ட் ஃபோனா’ என்ற வணிகத்தைத் தொடங்கினார்.

சட்டைகள் இறக்குமதியானபோது கொவிட்-19 கிருமித்தொற்றும் வந்துவிட்டது. இருப்பினும், அச்சவாலை மனந்தளராமல் எதிர்கொண்டு டீ சட்டைகளை இணையத்தில் விற்றார்.

நகைச்சுவை உணர்வுமிக்க இவர், தன் டீ சட்டைகளிலும் அதே நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

நகைச்சுவை உணர்வோடு சிங்கப்பூரின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் திரு லெட்சுமணனின் ஒன்பது டீ சட்டைகள். படம்: நாச்சியப்பன் லெட்சுமணன்

எதிர்பாராத இழப்பு

கொவிட்-19 தொற்றுகாலத்தின்போது திரு லெட்சுமணனின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாண்டு பிப்ரவரியில் மாரடைப்பால் இறந்தார்.

இந்நிலையில் தாயாரையும் தந்தையின் வணிகத்தையும் விட்டுவிட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது என ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடங்கவிருந்த நாச்சியப்பன், சிங்கப்பூரிலேயே தன் பட்டப்படிப்பைத் தொடங்கினார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் இதற்கு வாய்ப்பளித்தது.

‘12 குடும்ப வரலாறுகள் - சிங்கப்பூரின் பல கலாசாரங்களின் வெளிப்பாடு’ என்ற ஆங்கில நூலுக்கான கட்டுரையை எழுதிவந்திருந்தார் திரு லெட்சுமணன். நிறைவடையாத நிலையிலேயே இவரது கட்டுரை வெளியாகியுள்ளது: https://www.straitstimes.com/singapore/12-family-histories-documented-i…

‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ நூலிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

அடுத்த கட்டம்

தற்போது ஆறு மாதத்திற்கு மட்டும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று படிப்பை நிறைவுசெய்யவுள்ளார் நாச்சியப்பன். அதற்குள் எஞ்சியிருக்கும் சட்டைகளை விற்றுவர முயல்கிறார்.

எதிர்காலத்தில் சூழலைப் பொறுத்து வணிகத்தைத் தொடர விரும்புகிறார் நாச்சியப்பன்.

“தந்தைக்குப் பிறகு வணிகத்தை இவர் பொறுப்பாக ஏற்று நடத்துவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது,” என்கிறார் இவரின் தாயார் தெய்வானை.

“இவ்வணிகம் என் தந்தையின் நெறிகளைத் தினமும் எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர்போல் வாழ்ந்து அவரைப் பெருமைப்படுத்துவேன்,” என்கிறார் நாச்சியப்பன்.

டீ சட்டைகளை @floraandfaunaofsg இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!