முனைவர் பட்டம் மட்டும் போதாது!

உயிர்மருத்துவத்திலும், உயிர்வேதியியலிலும் முனைவர் பட்டம் வைத்திருக்கும் வினோத் பெஞ்சமின், 32, கல்வியில் மேலும் சாதிக்க வயது என்றுமே தடையில்லாததால் துடிப்புடன் இருக்கிறார்.

அண்மையில் கப்லான் சிங்கப்பூரின் பங்காளித்துவ பல்கலைக்கழகமான மர்டோக் பல்கலைக்கழகத்திலிருந்து தொழில் நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவிலும், தரவு அறிவியலிலும், நிபுணத்துவம் வழங்கும் தகவல் தொழில்நுட்பத்திலும் இவர் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

முதுநிலைப் பாடம் கற்றுத்தந்துள்ள திறன்களை வைத்துக்கொண்டு அறிவியலாளர் பணியில் புதிய ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை மருத்துவத்திற்குக் கொண்டுசேர்க்க முனைப்புடன் காத்திருக்கிறார் இளையர் வினோத்.

ஆண்கள் பெரும்பாலும் உயிர்மருத்துவம் சார்ந்த துறைகளில் கால் பதிப்பது இன்னும் சற்று அரிதாக இருந்தாலும், வினோத்துக்கு அதில் ஆர்வம் உருவாகக் காரணமாக இருந்தவர் அவருடைய தங்கை.

தங்கை சிறுவயதிலிருந்தே ‘ஸ்பைனல் பிஃபிடா’ (Spinal Bifida) என்னும் முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது முதுகெலும்பில் சீழ் வடிந்து அவரால் பிறரைப்போல் எளிதாக நடக்க முடியாது.

பிறவியிலேயே தன் தங்கையை இப்படியொரு நோய் புரட்டிப்போடும் என்று எதிர்பார்த்திராத வினோத், வளர்ச்சிக்குரிய உயிரியல்மீது இளம் பருவத்திலிருந்தே ஆர்வமாக இருந்தார்.

‘ஓ’ நிலைத் தேர்வுகள் முடிந்த பின் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவ அறிவியலில் பட்டயம் படிக்க தொடங்கிய வினோத்துக்கு தேசிய சேவை புரிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கிருக்கும் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற வாய்ப்பு கிட்டியது.

இளநிலைப் படிப்பில் சிறப்பாக தேர்ச்சி அடைந்த வினோத், அடுத்த நிலைக்குத் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக முதுநிலைப் பட்டத்திற்குப் பதிலாக முனைவர் பட்டம் பெறும் வாய்ப்பைப் பற்றினார்.

கொவிட்-19 கொள்ளைநோய்க் காலமாக இருந்ததால் வினோத்துக்கு முனைவர் பட்டம் பெற்ற பிறகு சிங்கப்பூர் திரும்பி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்தது. தற்போது ஐநெக்ஸ் இன்னொவேட் நிறுவனத்தில் அவர், பெண்கள் மற்றும் சிறார் மருத்துவத்தில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தபடியாக மருத்துவத்தில் குறிப்பட்ட புற்றுநோய் வகைகளை விரைவாகக் கண்டறியும் மருத்துவ சாதனத்தைக் கண்டுபிடிக்க முழு வீச்சில் இறங்க விரும்பிய வினோத், அதற்குத் தக்க திறன்களை வளர்த்துக்கொள்ள முதுநிலைப் பட்டம் பெற எண்ணினார். 24 மாதப் படிப்பை 16 மாதங்களிலேயே படித்து முடித்தார் வினோத்.

பல நாள்களிலும் ஓய்வை மறந்து, இவர் காலையில் ஆறு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை உழைத்தார். அவருக்குக் குடும்பத்தினரும் முழு நேர வேலையில் இருக்கும் ஊழியர்களும் பெருந்துணையாக விளங்கினர்.

“நேரத்தைத் திட்டமிட்டு வகுத்துச் செயலாற்றினால் எதையும் சாதிக்கலாம்,” என்று கூறும் வினோத், பாறையேற்றம், ஸ்கூபா டைவிங் போன்றவற்றில் நேரம் செலவிட்டுத் தம்மை இளைப்பாற்றிக் கொள்கிறார்.

சகோதரியும் சகோதரனும் தன்னைப் பார்த்து ஊக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வினோத் அவர்கள் இருவரும் அவர்களின் நிபுணத்துவ முதுநிலைப் பட்டம் பெற ஊக்கம் அளித்தார்.

எதிர்காலத்தில் மருத்துவத் துறையிலேயே வணிக ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவிருக்கும் வினோத், இக்காலத்து இளையர்கள் பட்டம் பெற்றவுடன் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பது தவறு என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, திறன் மேம்பாட்டிற்கு முதுநிலைக் கல்வி அவசியம் என்று வலியுறுத்தும் இவர், சம்பள உயர்வுக்கும் அது ஏதுவாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!