கல்வியும் சேவையும் இவர்களின் இரு கண்கள்

பலதுறைத் தொழிற்கல்லூரி படிக்கும் வரை படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் கடுமையாக உழைத்து 4.69 தரப் புள்ளிகளுடன் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் முஹம்மது ஹம்சா சையது அகமது கபீர்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் தொலைத்தொடர்பு தகவலியல் துறையில் பயின்று, என்.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், 2023ஆம் ஆண்டுக்கான ‘அனுக்ரா மெண்டாக்கியின் கல்விச் சாதனை விருது’, ‘செமர்லாங் மெண்டாக்கி விருது’ ஆகிய இரண்டையும் பெற்றுள்ளார்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் படிப்பில் நாட்டமில்லாது, விளையாட்டுத்தனமாக இருந்த ஹம்சா, பின் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுவியல் பிரிவில் சேர்ந்தார். அங்கும் படிப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்தாமல், படிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் இருந்ததாகத் தெரிவித்தார்.

பின், கல்லூரியில் சேரும் பருவத்தில், தனக்குப் பிடித்தமான கணினித் தொழில்நுட்பத் துறையில் சேர எண்ணியபோது அவர் நிராகரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

மூன்று முறை நிராகரிக்கப்பட்டபோது மனமுடைந்த ஹம்சா, நான்காவது முறை நிராகரிக்கப்பட்டால் ஏதேனும் பணியிலாவது சேர்ந்துவிடலாம் எனும் முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.

பின் நான்காவது முறையாக விண்ணப்பித்தபோது, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் தனக்குப் பிடித்தமான தொலைத்தொடர்பு தகவலியல் துறையில் இடம் கிடைத்தது.

நிராகரிப்பு தந்த வலியை ஆற்றலாக மாற்றி, கடுமையாக உழைத்துப் படிக்கத் தொடங்கியதாகப் பெருமையுடன் பகிர்ந்தார் ஹம்சா.

சிறந்த தேர்ச்சி பெற்றதால், கல்வி பயின்ற அதே துறையில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் பதவி உயர்வும் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றமும் பெற்று, குறிப்பிடத்தக்க மாறுதல் உருவாக்கும் திட்டங்களில் பணியாற்றவும் விழைவதாகக் சொல்கிறார்.

தன்மீது நம்பிக்கை வைத்து, படிக்க ஊக்குவித்த பெற்றோரே தமது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்றார் ஹம்சா.

கல்வி, தலைமைத்துவம், சமூகப் பணி: பம்பரமாகச் சுழலும் இளையர் ராதியா

சிறப்புத் தேவைகளை உடைய குழந்தைகளுடன் பணியாற்றுவதே தனக்கு மனநிறைவைத் தருவதாக 27 வயதுடைய ராதியா பேகம் முகம்மது அலி கூறினார்.

தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பாலர் பருவக் கல்விப் பிரிவில் பயின்று சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள இவர், 2023ஆம் ஆண்டுக்கான ‘அனுக்ரா மெண்டாக்கி கல்விச் சாதனை விருது’, ‘ஜெமிலாங் மெண்டாக்கி விருது’, ‘அனுக்ரா மெண்டாக்கி விருது’ ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார்.

சமூகப் பராமரிப்பு, சமூக சேவைகள் பிரிவில் பயின்ற இவர், 2015ஆம் ஆண்டு ‘தை ஹுவா குவான்’ தொண்டு நிறுவனத்தின் சிறப்புத் தேவையுள்ளோர் பிரிவில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

அங்கு சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கற்பித்தல், அன்றாடப் பணிகளை நிறைவேற்றச் சொல்லிக்கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததால் அதனை முழுநேரக் கல்வியாகப் பயின்று, அதன் தொடர்பாகவே பணியாற்ற ஆர்வம் வந்ததாகச் சொல்கிறார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் காலத்தில் சிறந்த தலைமைத்துவம், சமூக சேவை, பல்வேறு கல்வி தாண்டிய பணிகள் ஆகியவற்றுக்காக விருதுகளை வென்றுள்ளார் ராதியா.

பாலர் பருவக் கல்விப் பிரிவில் தேசிய கல்விக் கழகம் சார்பில், ‘மைக்ரோசாஃப்ட் ஸ்வே’ எனும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசும் வென்றுள்ளார்.

தனது கல்வியை இவ்வாண்டு முடித்துள்ள ராதியா, ‘தை ஹுவா குவான்’ தொண்டு நிறுவனத்தில் மீண்டும் பணிக்குச் சேர்ந்துள்ளதோடு தொடர்ந்து குழந்தைகளுடன், குறிப்பாக சிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளோடு வாழ்க்கை முழுவதும் பணியாற்ற விழைவதாகக் குறிப்பிட்டார்.

தனது இந்த மனப்பான்மையைக் கண்டு பெருமைப்படுவதோடு தன் பெற்றோர் தொடர்ந்து தனக்கு ஊக்கமளித்து வருவதாகவும் ராதியா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!