புதிய தொடக்கம்

- யுகேஷ் கண்ணன்

வாழ்வில் புதிய தொடக்கம் என்பது நம்மில் பலருக்கும் அச்சம் தரலாம்.

ஏனெனில், நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் பாதையிலிருந்து விலகுதல், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். அவ்வச்சத்திற்கு நானும் விதிவிலக்கன்று.

ஆனால், வாழ்வில் புதிய வாய்ப்புகளைப் பெறவும் தொடர்ந்து திறன்களை வளர்த்துக்கொண்டு முன்னேறவும் இந்த அச்சத்தைக் கடக்க வேண்டியது இன்றியமையாததாக விளங்குகிறது.

அச்சத்தைத் தீய உணர்ச்சியாகப் பார்க்காமல், அதை எவ்வாறு நமக்கு பயனுள்ள வகையில் அணுகலாம் என்பதை நான் என் பாதையில் கற்றுக்கொண்டுள்ளதாக உணர்கிறேன்.

ஒரு புதிய தொடக்கத்தால் நம் மனத்தில் ஏற்படும் அச்சத்தை ஒரு நொடி தள்ளி வைத்து, அந்த அச்சத்திற்கான காரணம் என்னவென்று சிந்தித்தால், அது நமக்குப் பெரும்பயனை அளிக்கக்கூடும்.

புதிய தொடக்கத்தில் இருக்கும் ஆபத்துகளும், அதனால் நேர வாய்ப்புள்ள தீய விளைவுகளுமே பெரும்பாலான நேரங்களில் நமக்கு அச்சம் தரலாம். இந்த அச்சம், அந்த ஆபத்துகளைப் பற்றியும் விளைவுகளைப் பற்றியும் நம்மைத் தொடர்ந்து நெடுநேரம் சிந்திக்கத் தூண்டும். இதனாலேயே பல நேரங்களில் நாம் ஒரு புதிய தொடக்கத்தைக் கைவிட்டுவிடுவோம்.

அதற்கென்று பயத்தை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் என்றில்லை. அப்படிச் செய்வதும் கடினம். அதற்கு மாறாக, பயத்தை ஒரு வழிகாட்டும் கருவியாகப் பயன்படுத்தலாம். சிறிதளவு பயத்துடன் செயல்படுவது நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவதை உறுதிசெய்யும்.

அளவிற்கு மீறிய அச்சந்தான் ஆபத்து, அளவான பயம் பயனளிக்கும் என்பது என் எண்ணம்.

ஒவ்வொரு புது ஆண்டும் ஒரு புது தொடக்கம் என்றுதான் கூற வேண்டும். இவ்வாண்டை எண்ணி எனக்கு ஒருபுறம் பயமாக இருப்பினும், மறுபுறம் உற்சாகமாகவும் உள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர் என்ற பொறுப்பை வகிக்கும் நான், 2024ஆம் ஆண்டு பேரவையின் பல நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட இருக்கிறேன்.

தமிழ் சமூகத்திற்குச் சேவையாற்ற முனையும் சமூக சேவை நிகழ்ச்சி, தமிழ் மாணவர்களை பல்கலைக்கழக வாழ்விற்குத் தயார்படுத்தும் ‘சாதனா’, தமிழ் இளையர்களுக்கு இடையே துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா’, தமிழ் மாணவர்கள் தங்கள் மொழி, புத்தாக்கத் திறன்கள் முதலியவற்றைச் சோதித்து, வளர்த்துக்கொள்ள உதவும் ‘யுத்தம்’, மாணவர்களின் கலைத்திறன்களை மெருகேற்றும் குறும்படம், ஆடல், பாடல் காணொளிகள், அவர்களிடம் தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டுசேர்க்க உதவும் கலை கலாசார நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைக்க வழிவகுக்கும் ‘சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு’ என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எங்கள் பேரவை இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ளது.

பேரவையின் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேற வேண்டும் என்று விரும்புவதோடு, ஒரு தலைவனாக, என் திறன்களை வளர்த்துக்கொள்வது மட்டுமின்றி, சக குழு உறுப்பினர்களின் திறன்களை வளர்க்கவும் உதவ வேண்டும் என்றும் விழைகிறேன்.

இப்புதிய ஆண்டில் ஏற்படும் புதிய தொடக்கம் அனைவருக்கும் சிறப்பானதாக அமையுமென்றும் நம்புகிறேன்!

Bio : யுகேஷ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல், தெற்காசிய படிப்புகள் துறைகளில் பயிலும் மாணவர். இவர் தமிழ் முரசு நாளிதழின் கல்விமானும் ஆவார். தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!