திருப்பதி ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வாண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில், இன்று 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று இன்று இரவு 7 மணிக்கு அங்குராற்பண நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாள்களும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும்.

பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன், கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார்.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22ஆம் தேதி நடக்கிறது.

கருட சேவை அன்று நான்கு மாட வீதிகளில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்கவிருக்கிறது.

அடுத்த நாள் 23ஆம் தேதி தங்கத்தேர் பவனி, 26ஆம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஆறு லட்சம் லட்டுக்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!