வாழ்வும் வளமும்

சிங்கப்பூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் ஆளுமை செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலை அமைப்பின் ‘கணையாழி’ விருது வழங்கி கௌர­விக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு காலத்துக்கும் அழியாத அதில் வர்ணிக்கப்பட்டுள்ள காதல், பக்தி தொடர்பான அம்சங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய ஆபரணங்களை ஏப்ரல் 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.