தங்களுக்கு ஏதுவான சூழ்நிலையிலிருந்து வெளியேற உலக நாடுகளுக்கு காப்28 தலைவர் வேண்டுகோள்

துபாய்: நாடுகள் தங்களுக்கு ஏதுவான சூழ்நிலையிலிருந்து வெளியேறி, மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காப்28 அமைப்பின் தலைவரான சுல்தான் அல்-ஜபேர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்தார்.

இரண்டு வாரம் நீடித்த காப்28 உச்சநிலைக் கூட்டத்தின் இறுதியில் ஒரு கலந்துரையாடல் அங்கத்தில் பேசிய டாக்டர் அல்-ஜபேர், “இந்த வேலையை இணைந்து முடிப்போம். நீங்கள் உங்களின் ஏதுவான சூழ்நிலையிலிருந்து வெளியேற வேண்டும்,” என்று கூறினார்.

இன்னும் ஐந்து நாள்களில் அதாவது மாநாடு டிசம்பர் 12ஆம் தேதி நிறைவுபெறுவதற்கு முன், நாடுகளின் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) கூடி, தங்கள் நாட்டின் வெளிப்பாட்டை தெரிவிப்பர்.

புவிவெப்பமடைதலுக்கு காரணமான மிக சிக்கலான புதைபடிவ எரிபொருள்கள் பிரச்சினையை சுமார் 200 நாடுகள் எப்படி கையாளப்போகின்றன என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

அவற்றில் குறைந்தது 80 நாடுகள் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை காப்28 உடன்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளன.

இப்படிப்பட்ட ஒரு முடிவு முன்னெப்போதும் இல்லாததாக, சுமார் 30 ஆண்டுகளாக ஐக்கிய நாட்டு பருவநிலை உச்சநிலை மாநாடுகள் எடுக்காத ஒரு முடிவாக இருக்கும்.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு காப் பருவநிலை உச்சநிலை மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று கிழக்கு ஐரோப்பிய நாடுகள் யோசித்து வருகின்றன. ரஷ்யாவோ எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய நாடு காப் அமைப்பின் தலைவராக வந்தால் அதை தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தும் என்று ரஷ்யா சூளுரைத்திருக்கிறது.

டிசம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, அஜர்பைஜான் அடுத்த ஆண்டு காப் பருவநிலை உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

மோல்டோவாவும் செர்பியாவும் சுழற்சி முறையில் மாநாட்டுக்குத் தலைமையேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

நிலைமை இப்படியிருக்க, தனது எண்ணெய், எரிவாயுத் துறை தனது கரிம வெளிப்பாட்டை 35லிருந்து 38% வரை குறைக்க வேண்டும் என்று கனடா கூறியுள்ளது. புதைபடிவ எரிபொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடான கனடாவுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

அந்நாட்டின் சுற்றுப்புற, பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஸ்டீவன் கில்பர்ட், கனடாவின் எண்ணெய், எரிவாயுத் துறை தனது கரிம வெளிப்பாட்டு குறைப்பு பற்றி டிசம்பர் 7ஆம் தேதி மாநாட்டில் தெரிவித்தார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் கரிம வெளிப்பாட்டுக்கு ஒரு வரம்பை ஏற்படுத்தும். கரிம வெளிப்பாட்டு குறைப்பு பற்றி கனடா வகுக்கும் வரம்புக்குக் கீழ் கரிமத்தை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படும்.

அவ்வாறு கரிம வெளிப்பாட்டைக் குறைவாக வைத்திருக்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் வர்த்தக அனுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!