வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்தார் முகம்மது ஷமி!

அகமதாபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி.

இத்தனைக்கும் இந்திய அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த அரையிறுதிப் போட்டியில் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருது வென்றார் ஷமி.

“எப்பொழுதுமே அப்போதைய சூழலை ஆராய்வேன். ஆடுகளத்தின் தன்மை, பந்து ‘ஸ்விங்’ ஆகிறதா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்வேன்,” என்று ‘ஸ்டார் ஸ்போர்ஸ்’ ஒளிவழியிடம் அவர் சொன்னார்.

“பந்து ஸ்விங் ஆகவில்லையெனில், ஸ்டம்ப்பைப் பார்த்தே பந்துவீசுவேன். பந்தடிப்பாளர்கள் ‘டிரைவ்’ ஆடும்போது, பந்து அவர்களின் மட்டையில் பட்டு ‘கேட்ச்’ ஆகும் வகையில், ஆடுகளத்தின் குறிப்பிட்ட பகுதியை நோக்கிப் பந்தை வீசுவேன்,” என்று ஷமி கூறினார்.

ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடரின் இடையிலேயே காயமடைந்து வெளியேறியதை அடுத்து, ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தது. அவ்வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ஷமி.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் மும்முறை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக்கொண்டார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் ஷமி முக்கியப் பங்காற்றுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!