You are here

உல‌க‌ம்

200,000 கொடையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அம்பலம்

மலேசியாவில் 200,000 பேருக்கும் அதிக உறுப்பு நன்கொடையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் அம்பலமாகி இருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 46.2 மில்லியன் கைத்தொலைபேசியாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியா னதாக மூன்று மாதத்திற்கு முன் தெரிவிக்கப்பட்டது.

பெய்ஜிங் நகரில் சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்த திட்டம்

பெய்ஜிங்: சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் மூட பெய்ஜிங் திட்டமிடுகிறது. குறைந்தபட்சம் 40 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் அத்தகைய சட்டவிரோத கட்டடங்களையும் 500 உற்பத்தி நிறுவனங்களையும் மூடுவதோடு அத்தகைய கட்டடங்கள் இனிமேலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய இருப்பதாக அந்த நகரின் தற்காலிக மேயர் சென் ஜினிங் அரசுக்கு சமர்ப்பித்த தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நகர மையத்திலிருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடி அமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டின் வெற்றி ரகசியத்தைத் தேடும் ஆடவர்

பெய்ஜிங்: சோங்சிங் பகுதியில் இருக்கும் பாலம் ஒன்றின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக தனிமையில் வசித்துவரும் திரு வாங் செங்ஷெள, 49, லாட்டரி சீட்டில் வெற்றிபெறும் எண்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. அன்றாடச் செலவுகளுக்காக தபால் நிலையத்திலும் துப்புரவாளராகவும் அவர் வேலை செய்தது தெரியவந்துள்ளது.

சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிரடி வரி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பொருட்களும் சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து வரும் எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் கூடுதலான வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நேற்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

2019ல் அமெரிக்கத் தூதரகம் ஜெருசலத்துக்கு மாறும்

ஜெருசலம்: 2019ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் தூத ரகம் ஜெருசல நகருக்கு மாற்றப் படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள் ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்துக்கு மாற்றும் அமெரிக்காவின் முடி வால் பாலஸ்தீனர்கள் ஆத்திர மடைந்துள்ளனர். அனைத்துலக நாடுகளும் தங்களுடைய கவலையை வெளிப் படுத்தியுள்ளன. திரு பென்ஸ் தமது பேச்சில் இஸ்ரேலுடனான அமைதித் பேச்சை பாலஸ்தீனர்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க செலவின மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்து

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தற் காலிக நிதி மசோதாவுக்கு குடி யரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து முடங்கிக் கிடந்த அரசாங்கம் செயல்படத் தொடங் கியது. இளம் சட்டவிரோத குடியேறி களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியினரின் கோரிக் கையை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டதால் மசோதா சுமூ கமாக நிறைவேறியது. இதையடுத்து அதிபர் டோனல்ட் டிரம்ப் மசோதாவில் கையெழுத்திட்டு அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

பெருந்திட்டங்களால் ஜோகூரில் 250,000 புதிய வேலைவாய்ப்புகள்

பாசிர் கூடாங்: ஜோகூரை புதிய பொருளியல் மண்டலமாக உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான நீண்டகாலத் திட்டங்கள் அர சாங்கத்தின்வசம் இருப்பதாகவும் அம் மாநில முதல்வர் முகமது காலித் நூர்தின் தெரிவித்துள்ளார். “ஆர்டிஎஸ் எனப்படும் பெருவிரைவு ரயில் திட்டம். ஜிமாஸ்=ஜோகூர் பாரு இரட்டை ரயில்தடத் திட்டம், கோலாலம்பூர் =சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம், சுத்திகரிப்பு, பெங்கெராங் பெட்ரோ கெமிக்கல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற பெருந்திட்டங்கள் நிறை வுற்றதும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஜோகூர் சிறப்பான இடத்தைப் பெறும்.

வடகொரிய தலைவரின் உருவப்படத்தை எரித்த தென்கொரியர்கள்

சோல்: தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொ ரியா பங்கேற்பது குறித்து அதிருப்தி நிலவிவரும் வேளை யில் நேற்று தென்கொரியர்கள் சிலர் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடகொரியாவின் சாம்ஜியோன் இசைக்குழுத் தலைவர் ஹயோங் சோங் வோல் உட்பட வடகொரிய பேராளர்கள் தென்கொரிய தலை நகர் சோலுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடங்களைப் பார்வையிட நேற்று சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தெற்கு தாய்லாந்தில் குண்டுவெடிப்பு; மூவர் மரணம், 22 பேர் காயம்

பேங்காக்: தாய்லாந்தின் தெற்கு மாநிலமான யாலாவில் அமைந்துள்ள சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் மரணமடைந்தனர்; 22 பேர் காயம் அடைந்துள்ளனர். நீண்டகாலமாக செயல்பட்டு வரும் மலாய் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களின் மையமாக தாய்லாந்தின் தெற்குப் பகுதி உள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் 6,000க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

காபூல் ஹோட்டல் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள இன்டர்கான்டி னென்டல் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் மரணமுற்றதாகவும் நூற்றுக்கணக் கானோர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக் கக்கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Pages