You are here

உல‌க‌ம்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சுபாங்: சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்ட மலேசிய விமான நிறுவனம் ஒன்றின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதனால் அதில் பயணம் செய்தோர் நான்கு மணி நேரத் தாமதத்தை எதிர்நோக்கினர். நேற்று முன்தினம் இரவு 7.40 மணிவாக்கில் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இரவு 8 மணி அளவில் இரண்டு தொலைபேசி அழைப்புகளை விமான நிலையம் பெற்றது.

MH370 தேடுதல் பணி ஜூலையுடன் முடிவுறும்: மலேசியா, சீனா ஒப்புதல்

ஈப்போ: ஈராண்­டு­களுக்கு முன்பு 239 பய­ணி­களு­டன் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370ஐத் தேடும் பணி குறித்து ஆஸ்­தி­ரே­லிய போக்­கு ­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவு மேற்­கொள்­ளும் முடிவை ஏற்­றுக்­கொள்­ளப்போவதாக மலேசிய போக்­கு­வ­ரத்து அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. தேடுதல் பணியை முன்­னி­ருந்து மேற்­கொள்­ளும் ஆஸ்­தி­ரே­லிய போக்­கு­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவின் தலைவர் ஜூலை மாதத்­துக்­குள் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் ஏதும் இல்லை­யெ­னில் அந்த விமா­னத்தைத் தேடும் பணியை முடித்­துக்­கொள்­ளப்போவதாக ஆஸ்­தி­ரே­லிய போக்­கு­வ­ரத்து பாது­காப்­புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

ஹில்லரி, சாண்டர்ஸ் இறுதிக்கட்ட மோதல்

வா‌ஷிங்டன்: ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்கு பகீரத முயற்சியில் ஈடுபட்டு வரும் பெர்னி சாண்டர்ஸ் இறுதிக் கட்டமாக கென்டக்கி, ஒரிகனில் நடைபெறும் முன் னோடித் தேர்தலில் தனது பலத் தைக் காட்டுவார் என்று கூறப்படு கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க பேராளர்கள் ஆதரவுடன் முன் னணியில் உள்ள ஹில்லரி கிளிண்டன் வரும் ஜூலை நிய மனத்தில் வேட்பாளராக அறிவிக் கப்படுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

பரிவுமிக்க இதயத்துடன் ஹாங்காங் வந்த சீன அதிகாரி

ஹாங்காங்: ஹாங்காங்கில் தனது பிடியை சீனா இறுக்கி வரும் வேளையில் ஹாங்காங் வந்துள்ள சீனாவின் செல்வாக்குமிக்க அதி காரி ஒருவர், “பரிவுமிக்க இதயத் துடன் வந்துள்ளேன்,” என்று கூறி யிருக்கிறார். சீனாவின் கம்யூனிச நாடாளு மன்றத்தின் நாயகர் திரு ஷாங் டெஜியாங் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு ஹாங்காங் வந்துள்ளார். சீனாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஹாங்காங்குக்கு வருவது நான்கு ஆண்டுகளில் இதுவே முதல்முறை. இவரது வருகை, பாதி தன் னாட்சியுடன் செயல்படும் ஹாங் காங்கின் சுதந்திரத்துக்கு மிரட் டலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பேங்காக் குண்டுவெடிப்பு சந்தேக நபர்: நான் விலங்கு அல்ல

பேங்காக்: பேங்காக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவர், செய்தியாளர்களின் கேமரா முன்பு மனமுடைந்து பேசினார். “நான் ஒன்றும் விலங்கு அல்ல,” என்று முகச்சவரம் செய் யப்பட்டு வெறுங்காலுடன் நடந்து வந்த ஏடம் காராடாக் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இருவரும் நேற்று ராணுவ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப் பட்டனர். அப்போது பேசிய ஏடம் காராடாக், “நான் மனிதன், விலங்கு அல்ல,” என்று சொன் னார்.

இந்தோனீசியாவின் ஆட்சேபம் வரவில்லை

கடந்த ஆண்டு கடுமையான புகைமூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் தொடர் புடையதாக நம்பப்படும் இந்தோ னீசியத் தொழிலதிபர்மீது நட வடிக்கை எடுக்கும் சிங்கப்பூர் அர சாங்கத்தின் முயற்சிக்கு தனது அதிகாரபூர்வ ஆட்சேபணையைத் தெரிவித்து விட்டதாக இந்தோனீ சியா கூறியிருக்கிறது. சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சரி டம் இந்தோனீசியத் தூதர் ஆட் சேபணையைத் தெரிவித்திருப் பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அர்மனாதா நசிர் ‘ஜக்கார்த்தா போஸ்ட்’டிடம் கூறினார்.

இலங்கையில் பெருவெள்ளம், நிலச்சரிவு: எட்டுப் பேர் மரணம், ஒருவர் புதையுண்டார்

இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பத்து மாதக் குழந்தை உள்ளிட்ட எட்டுப் பேர் பலியாகிவிட்டனர். கொழும்பு நகரில் நாடாளு மன்றக் கட்டடம் உள்ளிட்ட பகுதி களுக்குள் வெள்ள நீர் புகுந்து விடாமல் தடுக்கும் பணிகளில் ராணுவப் படையினரை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிக்கு கடற்படையினர் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் மும்முரமாக நடை பெற்று வருவதாக தற்காப்புத் துறைச் செயலாளர் கருணசேன ஹெட்டியராச்சி நேற்று ஊடகங் களிடம் தெரிவித்தார்.

ரஷ்யப் படகை விடுவித்தது வடகொரியா

மாஸ்கோ: ஜப்பானிய கடல் பகுதியில் வடகொரிய கடலோர காவல் படையினர் இழுத்துச் சென்ற ரஷ்யப் படகையும் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்திகளையும் வட கொரிய அதிகாரிகள் விடுவித்திருப்பதாக ரஷ்ய ஊடகத் தகவல்கள் கூறின. இரண்டு நாட்களுக்கு முன்பு தென்கொரிய கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை வடகொரிய கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி அப்படகை இழுத்துச் சென்றதுடன் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்தி களையும் கைது செய்தனர்.

தொழிற் சாலைகளைக் கைப்பற்றப் போவதாக வெனிசுவேலா அதிபர் விடுத்த மிரட்டல்

கராகஸ்: லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் பொருளியல் நெருக்கடி காரணமாக அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்தத் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மதுரோ கேட்டுக்கொண்டுள்ளார். இல்லாவிடில் அந்தத் தொழிற் சாலைகளைக் கைப்பற்றப் போவதாக அவர் மிரட்டல் விடுத் துள்ளார். உற்பத்தியைத் தொடங்கு வதற்கு மறுக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஏமனில் ஐஎஸ் போராளிகள் தாக்குதல்: 37 பேர் மரணம்

ஏடன்: ஏமனில் ஐஎஸ் போராளிகள் நடத்திய இரு வெடிகுண்டு தாக்குதல்களில் போலிஸ்காரரர்கள் 37 பேர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏமனில் உள்ள துறைமுக நகரில் ஐஎஸ் போராளிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸ் படையில் சேர பலர் காத்திருந்தபோது அங்கு குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்ததாகவும் மற்றொரு குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானதாகவும் அதிகாரிகள் கூறினர். சுமார் 200,000 பேர் வசிக்கும் அந்நகரை அரசாங்கப் படையினர் அண்மையில் போராளிகளிடமிருந்து திரும்பக் கைப்பற்றினர்.

Pages