You are here

இந்தியா

சென்னை புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்புப் பணியில் 15,000 போலிசார்

படம்: தகவல் ஊடகம்

சென்னை: புத்தாண்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலி சார் குவிக்கப்பட உள்ளதாக மாந கர காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நடைபெற்ற உயரதிகாரிக ளின் ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து புத்தாண்டை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட காவல்துறை வெளி யிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்து ழைக்க வேண்டுமென சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

70% விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: உலக நாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளில் 70- விழுக்காட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டதாக அறிவியல், ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. தாயகம் திரும்பும் விஞ்ஞானிகளுக்கு இந்தியப் பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லை: சமயப் பள்ளி நிர்வாகி கைது; 51 சிறுமிகள் மீட்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள ஓர் இஸ்லாமிய சமயப் பள்ளியில் தங்கியிருந்த சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பள்ளி நிர்வாகி தங்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாகத் துண்டுச்சீட்டில் எழுதி அங்கிருந்த சிறுமிகள் பக்கத்து வீடுகளில் போட்டுள்ளனர். அண்டை வீட்டினர் போலிசுக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து சென்ற போலிசார் சமயப் பள்ளியில் இருந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகி தங்களை அடித்ததாகவும் நடனம் ஆடக் கூறிப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிரான்சில் 22 இந்திய மாணவர்கள் மாயம்

புதுடெல்லி: ரக்பி விளையாட்டுப் பயிற்சி வழங்குவதாகக் கூறி கடந்த ஆண்டு பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 22 இந் திய மாணவர்கள் மாயமானதால் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அவர்களை அழைத்துச் சென்ற லலித் டேவிட் டீன், சஞ்சீவ் ராய், வருண் சௌத்ரி என்ற மூன்று பயண முகவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களது அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல ஆவணங் களை சிபிஐ கைப்பற்றியது. மாணவர்கள் அனைவரும் பஞ்சாப், ஹரியானா மற்றும் புது டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.

ரசிகர்களிடம் ரஜினிகாந்த்: காலமும் நேரமும் மாறியே தீரும்

சென்னை: சென்னை கோடம்பாக் கத்தில் உள்ள ராகவேந்திரர் கல் யாண மண்டபத்தில் நான்காவது நாளாக நேற்று கோவை ரசிகர் களைச் சந்தித்த நடிகர் ரஜினி காந்த், காலமும் நேரமும் மாறும், மாறியே தீரும் என்று ரசிகர்களிடம் தெரிவித்தார். கோயம்புத்தூர் தமக்கு மிகவும் பிடித்த ஊர் என்று கூறிய அவர், “என் குருநாதர்கள் இருக்கிறார் கள். சுவாமி சச்சிதானாந்தரின் ஆசிரமம் இருக்கிறது,” என்றார். “ஒரு கட்டத்தில் பழனி சுவாமி களிடம் சிஷ்யனாகச் சேர்ந்த சச்சி தானந்தா பின்னர் இமயமலைக் குச்சென்று சிவானந்த சுவாமி களிடம் தீட்சை வாங்கி சச்சி தானந்த சுவாமிகளானார்.

‘கோயில்களை நள்ளிரவில் திறப்பதற்குத் தடையில்லை’

சென்னை: கோயில்கள் நள்ளிரவில் திறக்கப்படுவதற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதி மன்றம் மறுத்துவிட்டது. புத்தாண்டை ஒட்டி நள்ளிரவில் கோயில்களைத் திறக்க சில ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய் துள்ளனர். இதன் காரணமாக சென்னை யைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ் வத்தாமன் தாக்கல் செய்த மனுவில் ஆகம விதிகளின்படி இந்து கோயில்கள் கட்டப்பட்டு உள்ளதால் இரவில் கோயில்களைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது.

அதிமுகவிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் அதிரடியாக நீக்கம்

டிடிவி தினகரன் ஆதரவாளர் களை அதிமுவிலிருந்து நீக்கும் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலையைப் பின்னுக்குத் தள்ளி சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற அதிர்ச்சி யில் இருந்து மீளாத அதிமுக, தினகரன் ஆதரவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் முடிவு வெளியானதுமே தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), கலைராஜன் (தென்சென்னை), வெற்றிவேல் (வடசென்னை), ரங்க சாமி (தஞ்சை), பார்த்திபன் (வேலூர்), முத்தையா (நெல்லை) ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவியிலி ருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

‘டார்ச்’ வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை; மருத்துவ அதிகாரி நீக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னோ மாவட்டத்தின் நவாப்கஞ்சி பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் மின்சார வசதி இல்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 32 நோயாளிகளுக்குக் கண் அறுவை சிகிச்சையானது டார்ச் வெளிச்சத்தில் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியின் மருத்துவ அதிகாரியை நீக்கி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஆணையிட்டுள்ளார்.

கடும்பனியால் நாடெங்கும் 3,119 ரயில்கள் தாமதம்

புதுடெல்லி: பனிமூட்டம் காரணமாக 3,000க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 21 வரையிலான காலகட்டத்தில் சுமார் 3,119 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் நேற்று அதிகாலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. பஞ்சாப், அரியானா, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரயில், சாலை போக்குவரத்துப் பாதிப் படைந்தது. டெல்லியில் காலை நிலவிய கடும் பனி மூட்டத்தினால் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 26 ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது.

சுஷ்மா: பாகிஸ்தானில் ஜாதவ் மனைவி, தாயார் விதவையாக நடத்தப்பட்டனர்

புதுடெல்லி: குல்பூஷண் ஜாதவை பார்க்கச்சென்ற அவரது மனைவி யையும் தாயாரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விதவைகள் போல நடத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ ஷண் ஜாதவ் உளவு பர்த்ததாகக் கூறி அவரை பாகிஸ்தான் கைது செய்து சிறை வைத்துள்ளது. அவருக்குப் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தியாவின் தலையீட்டால் மரண தண்டனைக்கு அனைத் துலக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Pages