You are here

இந்தியா

ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு: 12 இடங்களில் போராட்டம்

தப்பாட்டம் ஆடி எதிர்ப்பை பதிவு செய்த இளையர்கள். படம்: தகவல் ஊடகம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தியும் கூட, அரசுத்தரப்பு தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்ப தால் போராட்டக் குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள தூத்துக்குடியில் மொத்தம் 12 இடங்களில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கோடையில் சூடுபிடித்தது மீன் விற்பனை

படம்: தகவல் ஊடகம்

கோடை காலத்தையொட்டி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கறுவாடு மீன்களின் விற்பனை சீராக அதிகரித்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தையில் தினந்தோறும் காலை வேளையில் கறுவாடுகளை வாங்கிச் செல்வதற்கென்றே கூட்டம் அலைமோதுகின்றது. மிகக் குறைந்த விலையில் மீன்கள் கிடைப்பதால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட பட்டினப்பாக்கம் வந்து கறுவாடுகளை வாங்கிச் செல்கின்றனர். படம்: தகவல் ஊடகம்

மீண்டும் நீல நிறத்திற்கு மாறியது அம்பேத்கர் சிலை

படம்: ஊடகம்

லக்னோ: மறுசீரமைக்கப்பட்ட அம் பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய தால், சிலை மீண்டும் நீல நிறத் திற்கே மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் மர்ம நபர் களால் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், படாவுன் நக ரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத் கர் சிலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. முன்னர் நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு சீரமைப்பின் போது காவி நிற பூச்சு அடிக் கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் திடலுக்கு பூட்டு: வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் திடலின் வாயிற்கதவுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்திய வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பலர் கைதாகினர். இந்தச் சம்பவம் காரணமாக சேப்பாக்கம் பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு நிலவியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக் கான ஆட்டங்களை சென்னையில் நடத்த எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

‘நீதிமன்றத் தீர்ப்பு பாஜக அரசுக்கு சாதகமானது’

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது மத்திய அரசு வழக்கறிஞரிடம் மத்திய அரசுக்கு சாதகமாகவும், தமிழக அரசு வழக்கறிஞரிடம் தமிழக அரசுக்கு சாதகமாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் குழப்பம் தீர்வதற்கு பதிலாக அதிகரித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிலங்களும் வளங்களும் மத்திய அரசால் அழிக்கப்படுகின்றன: திரைப்பட இயக்குநர்கள் சாடல்

சென்னை: தமிழகத்தின் வளங்க ளும் நிலங்களும் அழிக்கப்பட்டு உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக் கப்படுவதால் எந்தத் திசையில் திரும்பினாலும் நாளுக்கு நாள் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே இருப்பதாக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தெரிவித் துள்ளது. தமிழ்த் திரைப்பட இயக்குநர் இணைந்து இந்தப் பேரவையைத் துவக்கியுள்ளனர். இதையடுத்து இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, தங்கர் பச்சான், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

பூச்சிக்கொல்லி உண்ட 56 பசுக்கள் பலி

விஜயவாடா: வயல் வெளியில் மேய்ச்சலுக்காக சென்ற பசுக்கள் அங்கிருந்த பூச்சுக்கொல்லியை உண்டதால் கொத்துக் கொத்தாக மடிந்தன. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் தயிடா கிரா மத்தைச் சேர்ந்த லக்ஷ்மைய்யா என்பவரின் 100 பசுக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை சோளம் பயிர் செய்யப்பட்ட வயலில் இருந்த சயனைட் கலந்த பூச்சிக்கொல்லியை உண்டுவிட்டன. அடுத்த நாள் காலையில் 56 பசுக்கள் இறந்துவிட்ட நிலையில், மற்ற பசுக்கள் தறிகெட்டு ஓடின. மருத்துவ சிகிச்சைக்குப் பின் 20 பசுக்கள் காப்பற்றப்பட்ட நிலையில், மற்ற பசுக்கள் தேடப்பட்டு வருகின்றன.

மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கைபேசி உபகரணங்கள் பறிமுதல்

பெங்களூரு: சென்னையிலிருந்து மும்பைக்கு லாரி மூலம் கடத்திச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘அக்சரிஸ்’ எனப்படும் கைபேசி உபகரணங்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைபேசி உறை, கைபேசியின் உதிரி பாகங்கள், எல்சிடி பட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலிசார் அவை சீனா அல்லது துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கூறினர். இரண்டு நாட்களுக்கு முன்னர், ரயில் மூலம் 10,000 உயர் ரக கைபேசி மாடல்களுடன் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி; 18 பேர் பலி

புனே: சாலையோர தடுப்பில் மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர். கர்நாடக மாநிலம் பிஜாபுரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் புனேயில் உள்ள தொழில் பேட்டை யில் பணிபுரியும் 32 பேர் வழக் கம்போல், லாரியில் புனே நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது புனே = பெங்களூரு தேசிய சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மகாராஷ்டிரா வின் சத்தாரா மாவட்டம் அருகே கந்தாலா பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பியது.

இரட்டைக் கொலை: மூன்று எம்எல்ஏக்கள் கைது

 படம்: ஊடகம்

மகாராஷ்டிரா: சிவசேனா கட்சி யைச் சேர்ந்த தலைவர்கள் இருவரை கொன்றதன் தொடர்பில் அகமத்நகர் எம்எல் ஏக்கள் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் ஷாஹூன்நகர் பகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கோத்கார், 35, வசந்த் துபே, 40 ஆகிய இருவரும் பட்டப்பகலில் நேற்று முன்தினம் மாலை 5.15 மணி அளவில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குண்டடி காயங் களுடன் கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Pages