You are here

இந்தியா

நாடு முழுவதும் நடைபெறும் விவசாய விழாக்கள்

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கென புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளின் ஏற்பாட்டில் விவசாய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற விவசாய விழாவில் புதிய வகை பயிர் ஒன்றை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தினார்.

மோடி வருகை: உச்சக்கட்ட விழிப்புநிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் கோவை நகருக்குச் செல் வதைத் தொடர்ந்து போலி சார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் மோடி வந்திறங்கும்போது விமானநிலைய வட்டாரத்தைச் சுற்றிலும் சுமார் 450 போலி சார் பாதுகாப்புக்கு நிற்பர். சிங்காநல்லூரில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு சுமார் 1,000 போலிசார் பாதுகாப்பு தருவர். அரசியல் பொதுக்கூட்டத் துக்கு போலிசார் மிகுந்த விழிப்பு நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: முத்தரசன் தகவல்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன்

தஞ்சை: தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரி வித்தார். “தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் இருந்தாலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.

எனவே இம்முறை ஆட்சியில் மாற்றம் வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். “தமிழகத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் மிகுந்த ஆட்சியே தற்போது நிலவுகிறது,” என முத்தரசன் மேலும் தெரிவித்தார்.

மருத்துவம் படிக்க இடம்பெற்றுத் தருவதாகப் பலரிடம் கொள்ளை

சேது மாதவன்

சென்னை: மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம்பெற்றுத் தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய் வரை சுருட்டிய சென்னையைச் சேர்ந்த இளையர் ஒருவரை காவல்துறை யினர் கைது செய்தனர். சேது மாதவன் என்ற அந்த ஆடவர் மீது திருச்சியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை செல்வமணி என்பவர் அளித்த மோசடிப் புகாரின் பேரில், போலிசார் இந் நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த 39 வயதான சேது மாதவன், சொந்த நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: கனிமொழி புகார்

திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி

சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றார். “தமிழகத்தில் பல தொழில்கள் முடங்கிவிட்டன. இங்கிருக்கும் தொழில்கள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

தியாகிகள் தினம்

தியாகிகள் தினத்தில் குழந்தைகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தியாகிகள் தினத்தில் குழந்தைகளுடன் மோடி நாடு முழுவதும் நேற்று முன்தினம் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுடெல்லியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மேலும் தியாகிகள் தின நிகழ்வையொட்டி டெல்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். அப்போது நிகழ்வுக்கு வந்திருந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். படம்: ஊடகம்

வகுப்புகளை புறக்கணிக்க தமிழக ஆசிரியர்கள் முடிவு

தமிழ்நாடு ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

தமிழக ஆசிரியர்கள் தங்களுடைய தொடர் மறியல் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று வகுப்புகளைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் முடங்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. ‘ஜாக்டோ’ என்ற தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் இன்றும் தொடரும் என்று ‘ஜாக்டோ’ அமைப்பின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ராமமூர்த்தி நேற்று கூறினார்.

பால் பவுடர் டின்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: பால் பவுடர் டின்களில் மறைத்து எடுத்து வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின. இதையடுத்து கோழிக்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் (32 வயது) என்பவர் கைதானார். நேற்று முன்தினம் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, துபாயில் இருந்து வந்த இவர் உள்ளிட்ட ஐந்து பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது ரியாஸ் கொண்டு வந்த பால் பவுடர் டின்களை ஆராய்ந்தபோது அவற்றுள் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓராண்டு முதல்வர் திட்டம்: விஜயகாந்த் புதிய யோசனை

விஜயகாந்த், ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்த லில் வெற்றிபெறும் பட்சத்தில் ஓராண்டு காலம் தனக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண் டும் என திமுக தலைமையிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இடம்பெறத் தயார் என விஜய காந்த் கூறியதாகவும் இதை யடுத்து அவரது இந்த நிபந்தனை குறித்து திமுக தரப்பில் தீவிர மாகப் பரிசீலிக்கப்பட்டு வருவ தாகவும் பிரபல தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு வேண்டும்; பழ.கருப்பையா மகன் போலிசில் மனு

பழ.கருப்பையா

சென்னை: மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து தனது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி பழ.கருப்பையாவின் மகன் ஆறுமுகம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இரு தினங் களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு வந்த ஒருவர், தனது தந்தையைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதாகத் தெரி வித்தார்.

“அன்று வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது, வாயிற்கதவு அருகே நின்றிருந்த ஒருவர் தாம், அதிமுக அலுவல கத்தில் இருந்து வருவதாகக் கூறினார். பின்னர் ‘அந்த நாய், பழ.கருப்பையா இருக்கிறானா?’ என ஒருமையில் கேட்டார்.

Pages