You are here

இந்தியா

முத்தரசன்: அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் அதிகாரிகள்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன்

மதுரை: அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடர்ந்து மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், தேர்தல் அதிகாரிகள் ஆளும் அதிமுகவுக்கு ஆதர வாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதியும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகப் புகார் எழுப்பி இருந்தார்.

ராமதாஸ்: கூட்டணி பற்றி பாஜகவிடம் எந்தவித முடிவும் தெரிவிக்கவில்லை

 பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

வேலூர்: தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை யாராலும் பார்க்க முடியவில்லை என்றார். “பாமகவுடன் கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கூட்டணி குறித்த எந்தவித பதிலையும் நாங்கள் இதுவரை அவர்களிடம் தெரிவிக்கவில்லை. பேச்சு வார்த்தை நிலுவையில் உள்ளது. கூட்டணி உள்ளதா, இல்லையா எனத் தற்போது வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது,” என்றார் ராமதாஸ்.

மார்ச் 23ல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஜெயலலிதா திட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா

சென்னை: எதிர்வரும் 23 அல்லது 29ஆம் தேதியில் அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23ஆம் தேதி நிறைந்த பௌர்ணமி என்பதுடன் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாளாகும். எனவே அன்றைய தினம் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது நல்லது என சோதிடர்கள் கூறிய ஆலோசனையை ஜெயலலிதா பின்பற்றுவார் எனக் கூறப்படுகிறது. இல்லையெனில் 23ஆம் தேதி தேர்தல் அறிக்கையையும் 29ஆம் தேதி வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஏப்ரல் 2ஆம் தேதி ஜெயலலிதா தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளார்.

தமிழிசை: எத்தகைய தேர்தல் கூட்டணியும் சாத்தியம்

தமிழிசை: எத்தகைய தேர்தல் கூட்டணியும் சாத்தியம்

திருச்சி: பாஜக நினைத்தால் எத்தகைய கூட்டணியையும் அமைக்கமுடியும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந் தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட 3,000 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாகக் குறிப் பிட்ட அவர், வேட்பாளர்களுக் கான நேர்காணல் திட்டமிட்டபடி நடந்துள்ளதாகக் கூறினார். “தற்போது மத்தியில் பாஜக அரசு உள்ளது. எனவே நாங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானா லும் கூட்டணி அமைக்க முடியும்.

தமிழக அரசின் ஆலோசகரை நீக்க ராமதாஸ் வலியுறுத்து

தமிழக அரசின் ஆலோசகரை நீக்க ராமதாஸ் வலியுறுத்து

சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வரும் ‌ஷீலா பாலகிருஷ்ணனை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா ஆகியோரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கோரியுள்ளார். “இவர்கள் தேர்தலில் தலையிட முடியாத அளவுக்கு முக்கியத்துவமற்ற பணிகளுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்,” என்று ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.

பெருகும் ஆதரவு: திமுகவினர் மகிழ்ச்சி

பெருகும் ஆதரவு: திமுகவினர் மகிழ்ச்சி

அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 27 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதியளித்தனர். ஏற்கெனவே திமுகவுக்கு 13 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் திமுகவை ஆதரிக்கும் அமைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். படம்: சதீஷ்

‘கழிவறை இல்லையெனில் காய்கறியும் இல்லை; முடிவெட்டுவதும் இல்லை’

கோப்புப்படம்

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடுகளில் கழிவறைகள் கட்டாதவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்வதில்லை; முடிவெட்டுவது இல்லை என மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லம் மாவட்டம், புதேடா எனும் கிராமத் தைச் சேர்ந்த துரிபாய் என்ற வியாபாரியும் அமருலால் சென் என்ற முடிதிருத்துபவரும் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்ஈ

அமருலால் சென் கூறுகையில், “வீட்டில் கழிவறைகள் கட்டாதவர்கள் என் கடைக்கு வந்தால் அவர்களுக்கு சவரம் செய்யவோ முடிதிருத்தவோ முடியாது என மறுத்து விடுவேன். அதேசமயம், கழிவறைகள் கட்டிவிட்டு வந்தால் முதல்முறை இலவசமாகவே முடிதிருத்தியும் சவரம் செய்தும் விடுகிறேன்,” என்றார்.

வாஸ்து நிறுவனத்தின் அறிவுரை பயன் தரவில்லை என நீதிமன்றத்தில் புகார்

கோப்புப்படம்

விஜயபுரா (கர்நாடகம்): வாஸ்து நிறுவனம் அளித்த அறிவுரையின்படி வீட்டில் மாற்றங்கள் செய்தபோதும் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் வாஸ்து நிறுவனத்தின் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா நகரைச் சேர்ந்தவர் மகாதேவ் துதிஹால். சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், 2007ஆம் ஆண்டுமுதல் கடன்தொல்லையால் அவதியுற்று வந்தார். இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரளா வாஸ்து’ என்ற நிறுவனத்தின் விளம்பரத்தைக் கவனித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் கனமழை; கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

உத்திரப்பிரதேசத்தில் கனமழை. படம்: ஏஎப்பி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. மழையால் சேதமடைந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கர்கவுடா பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட மூவர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்

கமால் நகரில் கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்கும் வனத்துறையினர்.

கௌஹாத்தி: கஹை­லி­பாரா பகு­திக்கு அருகில் உள்ள கமால் நகரில் சிறுத்தை ஒன்று கிணற்­றுக்­குள் விழுந்தது. வனத்­துறை அதி­கா­ரி­கள் சம்பவ இடத்­துக்கு விரைந்­து­சென்று மயக்க மருந்து கொடுத்து சிறுத்தையைக் கிணற்­றுக்­குள் இருந்து மீட்­ட­னர். இரவு நேரத்­தில் கிணற்­றுக்­குள் விழுந்து, வெளியேற வழி­தெ­ரி­யா­மல் மாட்­டிக்­கொண்ட புலியை அதிகாலை வேளையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கண்டனர். அவர்­க­ளது தக­வ­லின் பேரில் போலி­சா­ரும் வனத்­துறை அதி­கா­ரி­களும் சிறுத்தையைக் காப்பாற்றி கௌஹாத்தி விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர்.

Pages