இந்தியா, பாகிஸ்தானில் புயல் எச்சரிக்கை

அர­பிக் கட­லில் உரு­வான ‘பிபா்ஜாய்’ அதி­தீ­விர புய­லாக வலு­வ­டைந்­துள்ள நிலை­யில் புய­லுக்­கான தயார்­நிலை குறித்து விவா­திக்க இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளு­டன் அவ­சர கூட்­டம் நடத்­தி­யுள்­ளார்.

15ஆம் தேதி கட்ச் வளை­குடா பகு­தி­யில் புயல் கரை­யைக் கடக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­ப­கு­தி­யில் புய­லால் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கணிக்­கப்­பட்­டுள்ள ஆறு மாவட்­டங்­களில் தேசிய பேரிடா் மீட்­புப் படை­யி­ன­ரும் மாநில பேரிடா் மீட்­புப் படை­யி­ன­ரும் தயாா்நி­லை­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ளனா்.

குஜ­ராத் கட­லோர பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் வெளி­யேற்­றப்­பட்டு வரு­கின்­ற­னர். அங்கு நான்கு மாவட்­டங்­களில் ஜூன் 13 முதல் ஜூன் 15ஆம் தேதி­வரை பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கன­மழை பெய்து வரு­வ­தால் சவு­ராஷ்­டிரா, கட்ச் மாவட்­டங்­களி­லும் மும்­பை­யி­லும் ஆரஞ்ச் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

புயல் கரையைக் கடக்­கும்போது கன­மழை பெய்­யும் என்­றும் 150 கி.மீட்­டர் வேகத்­தில் காற்று வீசும் என்­றும் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது. கடல் அலை­யும் 3 மீட்­டர் உய­ரத்­திற்கு எழும்­பும் என்­றும் இந்­திய வானிலை மையம் கூறி­யுள்­ளது.

பிபர்­ஜாய் புய­லின் தாக்­கத்­தால் பாகிஸ்­தா­னின் வட­மேற்கு பகு­தி­யில் பலத்த மழை பெய்கிறது. இது­வரை 28 பேர் உயிரிழந்துள்ள னர். 140க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­துள்ளனர் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னின் தெற்­குப் பகு­தி­யில் புயல் தாக்­கம் உள்­ள­தால், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!