இளையர் பார்வையில் தமிழ் முரசு செயலி

தமிழ் முரசு செயலி வெளியீட்டு நிகழ்வில் ராப் கலைஞர் யங் ராஜா கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடி மக்களை மகிழ்வித்தார். படம்: தமிழ் முரசு
தமிழ் முரசு செயலி வெளியீட்டு நிகழ்வை ‘டமாரு’ குழுவினர் தங்களின் துடிப்பான படைப்புடன் துவங்கிவைத்தனர். படம்: டினேஷ் குமார்

தமிழ் முரசு நாளிதழுக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது அதன் புதிய செயலி அறிமுகம். நாளிதழ் நேற்று தமிழ் சமூகத்தினரின் அடையாளமாக அதன் செயலியை அறிமுகப்படுத்தியது. மின்னிலக்கமயமாதலை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் இதன் மூலம் இளையர்கள் அதிகப் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியில் அடங்கியுள்ள அம்சங்களைப் பற்றியும் செயலியைப் பயன்படுத்திய அனுபவங்களைப் பற்றியும் இளையர்கள் சிலரிடம் கேட்டு வந்தது இளையர் முரசு.

“இளையர்கள் பெரும்பாலும் இக்காலத்தில் செய்தித்தாள்களை அதிகம் படிப்பதில்லை. இந்தச் செயலி மூலம் அவர்கள் நாட்டு நடப்பையும் உலக நடப்பையும் ஆழமாக அறிந்துகொள்ள முன் வருவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் சமூக ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதல் நிர்வாகியான தாக்‌ஷா மோகன், 26. 

“செயலி வித்தியாசமாக உள்ளது. செய்திகளைப் படிக்க இன்னும் அதிகமான பிரிவுகள் இருந்தால் மேலும் நன்றாக இருக்கும். நான் விளையாட்டுப் பிரிவை அதிகம் படிப்பேன்,” என்கிறார் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரியில் ஒன்றாம் ஆண்டு பயிலும் கார்த்திகேயன் விக்ரம், 17.

“இணையத்தளங்களை விட செயலி பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதால் இது ஒரு நல்ல முயற்சி. செயலியில் உள்ள கூடுதல் அம்சங்களான நாணயச் செலாவணி, திரைப்படங்கள், ராசி பலன், சமூக நிகழ்வுகள், பாட்டி வைத்தியம், தங்க விலை உள்ளிட்டவை மிகப் பயனுள்ளதாக அமைகின்றன,” என்று கூறினார் கட்டடப் பொறியாளராகப் பணியாற்றும் 30 வயதாகும் வினோதினி. 

“வெறும் செய்திகளை மட்டும் படிப்பதற்குப் பதிலாக இந்தச் செயலியில் புதிதாக வலையொளிகளையும் காண முடிகிறது. நான் ஒவ்வோர் இரவும் வலையொளிகளைக் கண்ட பின்னர்தான் தூங்குவேன். இந்தச் செயலி மூலம் என்னால் தமிழில் வலையொளிகளைக் கண்டு ரசிக்க முடியும்,” என்றார் ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை நான்காம் வகுப்பில் பயிலும் காமாட்சி சந்திரசேகர், 16. 

“இந்தச் செயலி வழி நான் சிங்கப்பூர், உலகச் செய்திகளைத் சுலபமாக தெரிந்துகொள்கிறேன். அது மட்டுமின்றி செயலி கைப்பேசியில் பயன்படுத்தத் சுலபமாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழில் செய்திகளை வாசிக்க இச்செயலியைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்,” என்று கூறினார் மாணவர் ரேஷ், 19.

“இளையரான எனக்கு ராசி பலன் அம்சம் சுவாரசியமான ஒன்றாகத் தென்படுகிறது. அது மட்டும் இன்றி என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம், செயலியில் திரைப்படங்களுக்கு நுழைவுச்சீட்டு வாங்கும் வசதியாகும். நிச்சயமாக இந்த செயலியின் மூலம் இளையர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை எழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் கமலக்கண்ணன் யாழினி, 17.

“செயலியைத் திறந்து பார்த்தவுடன் முதல் ஐந்திலிருந்து 10 முக்கியமான தலைப்புச் செய்திகளைக் காணும் வசதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தற்போது நான் ஒவ்வோர் பிரிவாக சென்று முக்கியமான செய்திகளைப் பார்க்க வேண்டியதாக உள்ளது,” என்றார் தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் ரூபன் சுந்தரராஜ், 30. 

“செயலியில் அடங்கியுள்ள ஒவ்வொரு பிரிவுக்குமான அடையாளச் சின்னங்கள் மிகவும் அழகாக உள்ளன. எழுத்துருக்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். காணொளிகளும் வலையொளிகளும் பின்னடைவு இல்லாமல் நன்றாக செயல்படுகின்றன. ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குச் சுலபமாகப் போக முடிகிறது. என்னால் செய்திகளையும் விரைவாகப் பிறருக்கு பகிர்ந்துகொள்ள முடிகிறது,” என்று தெரிவித்தார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றும் செம்பியன் சோமசுந்தரம், 31.  

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னால் தமிழ் முரசு செயலி மூலம் சுலபமாக வாசிக்கும் திறனை மேம்படுத்திகொள்ள முடிகிறது. இதற்கு முன்னர் தமிழ் செய்திகளை அவ்வப்போது வாசிக்காத என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் செயலி ஒரு சிறந்த தொடக்கம்,” என்கிறார் பொறியாளராகப் பணிபுரியும் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி, 32.

“தமிழ் முரசு செயலியில் புதிதாக உணவு தொடர்பான விமர்சனக் காணொளிகள் வரப் போவதாக நான் கேள்விப்பட்டேன். அந்தக் காணொளிகளைக் காண நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்,” என்றார் ‘பிசியோதெரபி’ சிகிச்சை நிபுணராக பணிபுரியும் 31 வயதாகும் நந்தினி ஏகாம்பரம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!