சிறுகதைகளை வாசிப்பது - இளையருக்கான கலந்துரையாடல்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இளையர் பிரிவு, ‘சிறுகதைகளை எவ்வாறு பயில்வது?’ என்ற தலைப்பில் பொங்கோல் சமூக நூலகத்தில் இளையர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியது.

நவம்பர் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலை, புகழ்பெற்ற எழுத்தாளரும் தமிழ் விக்கி ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆயுர்வேத சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவரும் காந்திய முற்போக்குவாதியுமான டாக்டர் சுனில் கிருஷ்ணன் வழிநடத்தினார்.

‘பொதுமக்களுக்கு எழுதப்பட்ட கதை என்றால், படிப்பதற்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?’, ‘குறை யாரிடம் உள்ளது - எழுதியவரிடமா படிப்பவரிடமா?’, ‘கடலளவில் சிறுகதைகள் உள்ளன - எவற்றிலிருந்து தொடங்குவது?’ போன்ற கேள்விகளோடு நிகழ்ச்சி தொடங்கியது.

‘உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?’ என்ற கேள்விக்கு புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா, கல்கி, இந்திரா செளந்தரராஜன், வேற்றுமொழி எழுத்தாளர்கள் டொபேஷி, டேன் பிரௌன் போன்றோரின் பெயர்களைக் குறிப்பிட்டனர் பங்கேற்பாளர்கள்.

‘ஏன் சிறுகதைகள், இலக்கியம் படிக்கவேண்டும்?’ என்ற வினாவிற்கு விடையாக, நாம் நினைத்துப் பார்த்திராத எண்ண அலைகளுக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் அட்சய பாத்திரமாக சிறுகதையின் சுவையை வர்ணித்தார் டாக்டர் சுனில்.

சிறுகதையின் கூறுகள்

எழுத்தாளர் டாக்டர் சுனில் கிருஷ்ணன். படம்: ரவி சிங்காரம்

‘சிறுகதை’ என்பது சிறிய கதையல்ல; முடிவிலிருந்து புதிதாகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் கதைவடிவமே என்றார் டாக்டர் சுனில்.

‘நான்’ என்று சொல்லக்கூடிய தன்னிலைக் கதைக்கும், மூன்றாம் நபர் பார்வையிலான கதைக்கும் உள்ள வேறுபாடுகளையும் அவர் சுட்டினார்.

சிறுகதையின் கரு, படிமம், தலைப்பு, சொல்முறை, மையப் படம், உரையாடல், புற விவரணை, நுண்மை போன்ற கூறுகளையும் அவர் விவரித்தார்.

சுவையான சிறுகதை ஆய்வு

கருணைக் கொலை அல்லது மானக்கொலை, உறவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் ஆகிய சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது மயிலன் ஜி. சின்னப்பன் எழுதிய ‘ஆகுதி’ எனும் நூல்.

பூனையைத் தேடுவதுபோல் சமூகத்திலுள்ள நுண் உணர்வுகளை எடுத்துக்காட்டும் சுவாரசியமான கதை, லதாவின் ‘பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை’.

இச்சிறுகதைகளில் இளையர்களின் கண்ணுக்குத் தென்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திர விவரங்கள், படிப்பினைகள் பற்றி நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை இளையர்கள் பார்வையிட்டனர். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!