வழக்கநிலைத் தேர்வுகளில் அசத்திய மாணவர்கள்

வழக்கநிலைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி, தான் விரும்பியவாறு மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வான்வெளிப் பொறிவினை தொழில்நுட்பத்தில் ஈராண்டு ‘நைட்டெக்’ படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார் தஷ்வின்வரன் பாலசுப்ரமணியம், 16.

அண்மையில் தன் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியின் மாணவரான தஷ்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் தன் கல்விப்பயணத்தில் அடுத்த அடி எடுத்து வைப்பதில் பெருமகிழ்ச்சி.

அதுவும், இவ்வாண்டு வழக்கநிலைத் தேர்வெழுதிய ஸ்பெக்ட்ரா பள்ளி மாணவர்கள் அனைவரும் ‘ஐடிஇ’க்கு முன்னேறத் தகுதிபெற்றுள்ளதால் தஷ்வினுக்கும் பள்ளிக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தாயாருடன் தஷ்வின். படம்: ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி

தன்னம்பிக்கையுடன் புதிய பயணம்

“பொறியியல் எனக்குப் புதிது என்றாலும், பாடங்களைப் புரிந்துகொள்ள முயன்றால் என்னால் நிச்சயம் சாதிக்க முடியும்,”
தஷ்வின்வரன் பாலசுப்ரமணியம், 16.

பொறியியல் என்பது தஷ்வினுக்கு முற்றிலும் புதிய துறை. எனினும், உயர்நிலை ஒன்றிலிருந்து ஸ்பெக்ட்ரா ஆசிரியர்கள் கணிதத்தில் அவருக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்ததால் அவர் துணிந்து பொறியியல் படிப்பைப் பயிலவுள்ளார்.

“தொடக்கப் பள்ளியில் எனக்கு ஆங்கிலமும் கணிதமும் அவ்வளவாக வராது. ஆனால், ஸ்பெக்ட்ரா ஆசிரியர்கள் எனக்குப் பொறுமையாக சொல்லிக் கொடுத்ததால் எனக்கு நன்றாகப் புரிந்தது,” என்றார் தஷ்வின்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் அப்பாடங்களில் ‘ஏ’தரநிலைகூட எடுக்கத் தொடங்கினார் தஷ்வின்.

பலதரப்பட்ட அனுபவங்களால் உருவானவர்

தஷ்வினின் (பின்வரிசை, இடது) வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தினர். படம்: தஷ்வின்.

தஷ்வினுக்குத் தந்தை பெரும் முன்மாதிரி. சமையலில் வல்லவரான அவருடைய தந்தை, முன்பு ‘ரெட்மார்ட்’ விநியோகம் செய்தவர். அப்போது, தம் தந்தைக்கும் உதவிவந்தார் தஷ்வின்.

அதனால், ‘ஐடிஇ’ தேர்ச்சிப் பாடங்களில் சில்லறை, மின்வணிகம் மற்றும் சமையல், உணவகச் செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்தார் தஷ்வின்.

பள்ளியின் தொழில்துறை அனுபவத் திட்டத்தின்வழி மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் கடையில் பணியாற்றினார் தஷ்வின். ஸ்பெக்ட்ராவின் ‘ஐஷாப்’ (iShop) விற்பனை 2023லும் அவர் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

2022 முதல் 2023 வரை மாணவ மன்றத்தின் துணைத் தலைவராக இருந்து, பள்ளியின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று, சிறப்பு விருந்தினர்களை வரவேற்கவும் செய்தார் தஷ்வின்.

தரைப்பந்து போட்டிகளிலும் ‘ஐடிஇ இக்னைட்’ சவாலிலும் பள்ளியை அவர் பிரதிநிதித்தார்.

‘ஸ்பெக்ட்ரா’ வழங்கிய அனுபவங்கள் தனக்கு எதிர்காலத்தில் பெரிதும் உதவும் என நம்புகிறார் தஷ்வின்.

முன்மாதிரி மாணவர்

தஷ்வினுக்கு வழிகாட்டி தேவை என்றால் வெகுதூரம் தேடத் தேவையில்லை.

ஸ்பெக்ட்ரா தொடங்கப்பட்டபோது அதில் படித்த முதல் மாணவர்களில் ஒருவரான டிவினேஷ் ஜூட் வின்சென்ட், 22, ஐடிஇ சென்ட்ரலில் வான்வெளிப் பொறியியலில் NITEC, உயர் NITEC படித்து, தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப் படிப்பு மேற்கொண்டுவருகிறார்.

இவர்களது வெற்றிக்கு வித்திட்டுள்ள ஸ்பெக்ட்ரா பள்ளியின் பாடத்திட்டங்கள் பற்றிய மேல்விவரங்களுக்கு: https://www.spectra.edu.sg/

2017ல் டிவினேஷ் வழக்கநிலைத் தேர்வுகளைத் எழுதியபோது ஸ்பெக்ட்ராவின் தலைசிறந்த 40 மாணவர்களில் ஒருவராகத் தேர்ந்து, அன்றைய பள்ளி முதல்வரின் பாராட்டையும் பெற்றார். படத்தில் தன் தாயாருடன் டிவினேஷ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!