‘எதிர்மறை விமர்சனங்களைப் பொருட்படுத்தக்கூடாது’

தென்னிந்திய மொழிப் படங்களில் முத்திரை பதிக்க விரும்புவதாகச் சொல்கிறார் இளம் நாயகி அனுக்ரித்தி வாஸ்.

கடந்த 2018ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றவர். சூட்டோடு சூடாக சினிமா வாய்ப்புகள் பல தேடி வந்தபோதும் அனுக்ரித்தி அவற்றை ஏற்கவில்லை.

எனினும், பின்னர் ‘டிஎஸ்பி’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர், இப்போது தெலுங்கில் ரவிதேஜாவுடன் இணைந்து ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அனுக்ரித்தியின் தாய்மொழி மலையாளம். எனினும், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழிலும் அசத்தலாகப் பேசுகிறார்.

“எனது பள்ளிப்படிப்பை திருச்சியிலும் கல்லூரிப் படிப்பை சென்னையிலும் மேற்கொண்டேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதுதான் ‘மிஸ் இந்தியா’ அழகிப்பட்டம் கிடைத்தது.

“அப்போதே சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் 19 வயதில் சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லை. மேலும், தோற்றத்திலும் பள்ளி மாணவி போல் இருந்ததால் சினிமா வாய்ப்புகளை ஒதுக்கி வைத்தேன்.

“கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் திரையுலகில் நுழைய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன்.

“தமிழில் முதல் படத்திலேயே விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததை மறக்க இயலாது. நாசர், விடிவி கணேஷ், ஒளிப்பதிவாளர் மதி என அனுபவம் வாய்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்றும் நல்ல வாய்ப்பு அமைந்தது.

“இப்போது தெலுங்கு முன்னணி நாயகன் ரவி தேஜாவுடன் இணைந்துள்ளேன். இதில் நான் ஏற்றுள்ள ஜெயவாணி கதாபாத்திரத்துக்கு மிகப் பொறுத்தமான தேர்வு நான்தான் என்று இயக்குநர் வம்சி பலமுறை பாராட்டி உள்ளார்.

“இதுபோன்ற அடிதடிப் படத்தில் பெண் களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் கதை எழுதி இருப்பது சிறப்பு,” என்கிறார் அனுக்ரித்தி வாஸ்.

தன்னுடைய அழகை மற்றவர்கள் வர்ணிக்கும்போது பெருமிதமாக உணர்வ தாகக் குறிப்பிடுபவர், குழந்தைகள் தம்மை பாராட்டும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொல்கிறார்.

“ஏனெனில் குழந்தைகள் பொய் பேச மாட்டார்கள். அதனால்தான் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

“திரைத்துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலுமே இப்போது பெண்களுக்கு நல்ல ஆதரவும் ஊக்கமும் கிடைத்து வருகிறது. பெண்களை இச்சமூகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளது.

“முன்பெல்லாம் திரையுலகில் சாதிக்க துடித்த பெண் களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைப்பது கடினம். ஆனால் இப்போது பிள்ளைகளின் கனவு, லட்சியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“இதை மிகப்பெரிய சமூக மாற்றமாக கருதுகிறேன்,” என்கிறார் அனுக்ரித்தி.

இந்திய அழகிப் பட்டம் வென்றதால், தாம் மட்டுமே மிக அழகான பெண் என்ற எண்ணம் தமக்கு கிடையாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் வளர்ந்து ஆளான திருச்சியிலேயே தன்னைவிட பல அழகான பெண்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

எனவே, வாய்ப்பும் சூழலும் ஒருவரது வெற்றிக்கு உதவும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்கிறார்.

திரைத்துறையில் வாரிசுகளுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதை தம்மால் ஏற்க இயலாது என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள அனுக்ரித்தி, திறமை இருந்தால்தான் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்கிறார்.

“அமிதாப் பச்சன் மகன் என்பதற்காக அபிஷேக் பச்சனை யாரும் ஒப்பந்தம் செய்வதில்லை. அபிஷேக்கைவிட இந்தி திரையுலகில் பெரிய நடிகர்கள் உள்ளனர்.

“நட்சத்திரங்களின் வாரிசு என்பதால் தொடக்கத்தில் எளிதாக வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ரசிகர்கள் புத்திசாலிகள். யாரிடம் உண்மையான திறமை இல்லை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர்,” என்று சொல்லும் அனுக்ரித்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்துக் காட்டி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இவர்களைப் போன்றவர்களின் வெற்றி இளையர்களுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று குறிப்பிடுபவர், விஜய் சேதுபதியுடனான தமது நட்பு நீடித்து வருவதாகச் சொல்கிறார்.

“விஜய் சேதுபதி நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர். சிறந்த மனிதாபிமானம் உள்ளவர். எல்லோரிடமும் ஏற்றத்தாழ்வு பாராமல் ஒரே மாதிரியாகப் பழகுவார். அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். இந்த உண்மை அவருடன் பழகிய அனைவருக்குமே தெரியும்,” என்று சொல்லும் அனு கீர்த்தி, எதிர்மறையான விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் செயல்படுவதே பெண்கள் வெற்றி பெற கைகொடுக்கும் என்கிறார். .

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!