ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மகரம்

இன்றைய பலன் 22-2-2019

ஒருசிலரைப் பற்றிய உங்கள் கணிப்பு சரியாக அமையும். திட்டமிட்ட பணிகளை முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கலாம். பிறரது உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பது கூடாது. வரவுகள் திருப்தி தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.
நிறம்: பொன்னிறம், நீலம்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

நிழல் கிரகமான ராகு, கடக ராசியிலிருந்து பின் னோக்கி நகர்ந்து, மிதுன ராசியில், அதாவது உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் பிரவேசிப்பார். இது சிறப் பான இடப்பெயர்ச்சியாகும். 2ஆம் இட புதன், 11ஆம் இட குரு, 12ஆம் இட சுக்கிரன் நலம்புரிவர். 2ஆம் இட சூரியன், 4ஆம் இட செவ்வாய், 7ஆம் இட சந்திரன், 12ஆம் இட சனியின் ஆதரவில்லை. தனுசு ராசியில், அதாவது 12ஆம் இடத்தில் கால்பதிக்கும் கேதுவின் சுபத்தன்மை கெடும்.
பிரச்சினைகளைக் கண்டு கலங்காமல் அவற்றைச் சமாளிக்கும் வழிகளை ஆராயக்கூடிய பக்குவசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம்.

அடுத்துவரும் நாட்களில் உங்களது உடல்நலம் சிறப்பாக இருக்கும். பல பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும் சோர்வு என்பதே எட்டிப் பார்க்காது. வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்புண்டு. எந்தப் பணியையும் சுலபமாக முடிக்க இயலாது என்பதால் கூடுதலாக உழைக்க தயங்க வேண்டாம். நட்பு வட்டாரத்தில் சிலரது உதவியை எதிர்பார்க்கலாம். கூடுமானவரை அறிமுகமற்றவர்கள், நெருக்கம் அல்லாதவர்களுடன் இணைந்து எதையும் செய்ய வேண்டாம். மேலும் முக்கியப் பொறுப்புகளை பிறருடன் பகிர்ந்துகொள்ளாமலே இருப்பது நல்லது. குருவருளால் வரவுகள் அமோகமாக இருக்கும். செலவுகள் அனைத்தையும் ஈடுகட்டுவீர்கள்.  பணியாளர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வார இறுதியில் எதிர்பாராத ஆதாயங்கள் கிட்டும். 

குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க பெரியவர்கள் கைகொடுப்பர்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 20, 21.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.