ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

சிம்மம்

இன்றைய பலன் 22-2-2019

உதவி என்று கேட்டு வருபவருக்கு உங்களால் இயன்றதைச் செய்யலாம். அதே சமயம் உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளித்துவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை. எதிர்பார்த்த நல்ல தகவல் ஒன்று கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.
நிறம்: ஊதா, பொன்னிறம்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

சாயா கிரகம் எனப்படும் ராகு பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசியில் பிரவேசிப்பார். இது உங்கள் ராசிக்கு 3ஆம் இடம். ராகுவின் இடப்பெயர்ச்சி சிறப் பாக அமையும். 5ஆம் இட சுக்கிரன், 9ஆம் இட செவ்வாயின் அனுக்கிரகமுண்டு. 4ஆம் இட குரு, 5ஆம் இட சனி, 7ஆம் இட சூரியன், புதன், 12ஆம் இட சந்திரனின் ஆதரவு இல்லை. 5ஆம் இடம் வரும் கேதுவின் இடப்பெயர்ச்சி அனுகூலமற்றது.

சுவாரசியமான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடிப்பவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்களது உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தார் நலமாக இருப்பது நிம்மதி தரும். பொருளாதார நிலை குறித்த கவலை தேவையில்லை. உங்களது எதிர் பார்ப்புக்கு ஏற்ப சிலபல தொகைகள் கைக்கு வந்து சேரும். வழக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் எந்தச் சிக்கலும் எழாது. நண்பர்களில் நெருக்கமானவர்கள் தேவையான உதவிகளைக் கேட்காமலேயே செய்து கொடுப்பர்.

கூடுமானவரையில் அறிமுகமற்றவர்களுடன் இணைந்து எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. தவிர பணம் கொடுக்கல் வாங்கலையும் முடிந்தவரை தவிர்த்திடப் பாருங்கள். திட்டமிட்ட காரியங்களில் சில சுலபத்தில் முடியும் எனில், சில நண்பர்களின் உதவியுடன் செய்ய வேண்டியிருக்கும். சொத்துகள் வகையில் திடீர் ஆதாயமுண்டு. வழக்குகள் வெற்றி காணும். பணியாளர்கள் வழக்கமான பணி என்றாலும் அதில் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்ற வேண்டும். வியாபாரிகள் உற்சாக நடை போடுவர். வார இறுதி யில் பொறுப்புகள் அதிகரிக்கும். விநாயகப் பெரு மானுக்குரிய சிறப்பு பூசைகளச் செய்வது நல்லது.
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 19, 21.
அதிர்ஷ்ட எண்கள்: 4 ,7.