ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

கன்னி

இன்றைய பலன் 22-2-2019

இன்று புதுப் பொறுப்புகளை ஏற்பதில் அவசரம் கூடாது. இரட்டை வேடமிட்டு உங்களைக் குழப்ப நினைக்கும் சிலரை அடையாளம் காண இயலும். அத்தகைய வர்களை இன்று அறவே ஒதுக்கி வைக்கப் பாருங்கள். 

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6.
நிறம்: அரக்கு, பச்சை.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

மாதக் கோள்களான சுக்கிரன் ராசிக்கு 4ஆம் இடத்திலும், புதன் மற்றும் சூரியன் 6ஆம் இடத்திலும் வீற்றிருக்கின்றன. இந்த அமைப்புகள் சுபப்பலன்களை தரும். 11ஆம் இட சந்திரனால் நலமுண்டு. 3ஆம் இட குரு, 4ஆம் இட சனி, 8ஆம் இட செவ்வாய்  அனுகூலமாக இல்லை. 4ஆம் இடம் செல்லும் கேது, 10ஆம் இடத்திற்குப் பெயரும் ராகுவின் இடப் பெயர்ச்சிகள் சாதகமாக அமையவில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் ஏற்ற இறக்கங் களை சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் எதிலும் தேவையற்ற அவசரம் என்பது கூடாது. தவிர எது குறித்தும் அதிகப்படியாக யோசித்துக் கவலைப்படவும் தேவையில்லை. துணிவே துணை என்று நடைபோட் டீர்கள் எனில் எதிரிகளையும், திடீர் எதிர்ப்புகளையும் சமாளித்து திட்டமிட்டதைச் சாதிக்க லாம். பொதுவாக உங்களது உடல்நலம் திருப்திகரமாகவே இருக்கும். வருமான நிலை சுமார் எனலாம். வழக்கமான தொகை கள் உரிய நேரத்தில் கிடைக்காவிட்டாலும், சேமிப்பு களைக் கொண்டு செலவுகளை சமாளித்திடலாம். பொதுவாக பணிச்சுமை அதிகரித்திருக்கும்.  

உங்கள் இயல்புக்கேற்ப உண்மையாக உழைத்தீர்கள் எனில் இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். புது முயற்சி, சுபப்பேச்சுகள், சொத்துகள் தொடர்பான முடிவுகளை ஒத்திப்போடுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பணியாளர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு சறுக்கல் ஏற்பட லாம். வார இறுதியில் நம்பிக்கையூட்டும் தகவல்களைப் பெறுவீர்கள். இச்சமயம் பணிகள் வேகம் காணும்.
வீட்டில் சகஜநிலை இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 22, 23.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.