தெலுங்கானா தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல்

ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலில் முதல்கட்டமாக பாஜகவின் 52 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மேலிடம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக ஞாயிற்றுக்கிழமையன்று முதற்கட்டமாக 52 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதில், அக்கட்சியின் தெலுங்கானா மாநில பொதுச் செயலாளர் பண்டி சஞ்சய், கரீம் நகரில் இருந்து போட்டியிட உள்ளார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் இம்முறை சந்திரசேகர ராவுடன் கஜ்வேல் தொகுதியில் நேரடியாக மோதுகிறார். மேலும், ஹுஜூராபாத் தொகுதியிலும் இவர் போட்டியிடுகிறார்.

முதல் பட்டியலில் கோஷாமஹால் தொகுதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங்குக்கு மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது.

சார்மினார் தொகுதியில் மேகராணியும், பத்ராசலத்தில் தர்மாராவும் போட்டியிடுகின்றனர். விஜயசாந்தி, ஜெயசுதா ஆகியோர் 2வது பட்டியலில் இடம்பெறுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!