பொருத்தமான நிறத்தில் உதட்டுச்சாயம் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

உதட்டுச்சாயம் பெண்கள் பெரும்பாலும் விரும்பி அணியக்கூடிய ஓர் ஒப்பனைப் பொருளாகும். பல வண்ணங்களில் விற்கப்படும் உதட்டுச்சாயங்கள் பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியவை.

ஆனால் ஒரு பெண் தனக்கு ஒரு நிறம் பிடித்துள்ளது என்பதற்காக அந்த வண்ணத்தில் உதட்டுச்சாயத்தைப் போடுவது சரியன்று. அவரின் சரும நிறத்துக்கு ஏற்ற நிறத்தில்தான் உதட்டுச்சாயம் வாங்கவேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சருமத்தில் அடங்கியிருக்கும் நிறம்

ஒருவரின் சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் அவரது சருமத்தின் உட்புறத்தில் ‘அண்டர்டோன்’ எனும் நிறமி அடங்கியுள்ளது.

இந்த நிறமியை மணிக்கட்டில் இருக்கும் நரம்பின் வண்ணத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.

நரம்பு நீல நிறத்தில் இருந்தால் சரும நிறமி குளிர்ந்த வகை. பச்சையாக இருந்தால் அது வெம்மையான வகை. இரண்டு வண்ணங்களும் இல்லையென்றால் அந்த சரும நிறமி நடுநிலைப் பிரிவாகும்.

சருமத்தின் உட்புற நிறமியை அறிந்துகொண்ட பின்னர் ஒருவருக்கு எந்த உதட்டுச்சாயம் பொருந்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

குளிர்ந்த வகை நிறமி கொண்டவர்கள் நீலம் அல்லது ஊதா வண்ணம் கொண்ட உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்தலாம். பெர்ரி எனப்படும் பழ வகைகளின் வண்ணங்கள் அவர்களின் உதடுகளுக்குப் பொருந்தும்.

நடுநிலை நிறமி கொண்ட சருமத்தினர், உதட்டுச்சாயத்தின் நிறத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த நிற உதட்டுச் சாயமும் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால் இவர்கள் இளஞ்சிவப்பு நிற உதட்டுச்சாயத்தை வாங்கிக் கொள்ளலாம்.

வெம்மையான நிறமி கொண்ட சருமத்தினர் முடிந்தவரை சிவப்பு, ஆரஞ்சு வண்ண உதட்டுச்சாயம் அணிந்தால் சிறப்பாக இருக்கும்.

சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அணியக்கூடிய உதட்டுச்சாயம்

நமது நிறமியை அடையாளம் கண்டு உதட்டுச்சாயம் அணிந்தாலும் சில நேரங்களில் விழாக்காலங்களில் தனித்துவமான உதட்டுச்சாயம் அணிய முற்படுவோம்.

மேலோட்டமாக, வெள்ளைநிறத்தவர்களுக்கு கறுப்பு உதட்டுச்சாயம் பொருந்தாது, கறுப்பான தோல் இருந்தால் மென்மையான நிறம் கொண்ட உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று சொல்லாமல், நம் சருமத்தில் இருக்கும் நிறமிக்கு ஏற்ப உதட்டுச்சாயங்களைத் தேர்ந்தெடுத்து இத்தகைய நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தலாம்.

‘நியூட்’ வகை நிறங்கள் தற்போது உதட்டுச்சாயங்களில் மிகவும் பிரபலமாக வலம்வருகின்றன. ஆனால், அவை அனைத்துவகை சருமத்தினருக்கும் பொருந்தாது.

சிலருக்கு நியூட் வண்ணம் கொண்ட உதட்டுச்சாயம் அணிந்தால் அவர்கள் சோர்வாக இருப்பது போன்று தோற்றமளிக்கும்.

அதனால், அத்தகைய உதட்டுச்சாயத்தை அணிய விரும்பினாலும் அதில் சிறிதளவு இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம் கலந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கண்களின் நிறம்

ஒருவரின் கண் நிறம்கூட சரியான உதட்டுச்சாய நிறத்தைத் தேர்ந்தெடுக்க உதவும். நீலம் அல்லது பச்சை நிறக் கண்கள் இருந்தால் இளஞ்சிவப்பு அல்லது பவள நிறத்துடன் கூடிய உதட்டுச்சாயங்கள் நன்றாக இருக்கும்.

பழுப்பு நிறக் கண்கள் உடையவர்களுக்கு ஆரஞ்சு அல்லது பழுப்பு போன்ற நிற உதட்டுச்சாயம் கண்களின் நிறத்தை எடுத்துக்காட்ட உதவும். பழுப்பு நிறக் கண்கள் இருந்தால் நடுநிலையான அல்லது வெம்மையான நிற உதட்டுச்சாயம் கண்களில் உள்ள பச்சை அல்லது தங்க நிறப் புள்ளிகளை எடுத்துக்காட்ட உதவும்.

சிகை நிறம்

சிறந்த உதட்டுச்சாய நிறத்தைத் தீர்மானிப்பதில் முடியின் நிறமும் பங்கு வகிக்கக்கூடும். அடர் பொன்னிறம் அல்லது வெளிர் பழுப்பு போன்ற நிறமுள்ள கூந்தல் கொண்டிருந்தால் வெம்மையான நிறமுள்ள உதட்டுச்சாயங்கள் தலைமுடியின் அழகை முழுமையாக்கும்.

சாம்பல் பொன்னிறம் அல்லது கறுப்புக் கூந்தல் இருந்தால் மென்மையான நிற உதட்டுச்சாயம் சிறப்பாக இருக்கும். சிவப்பு நிற முடி இருந்தால் சருமத்தின் நிறமியைப் பொறுத்து வெம்மையான அல்லது குளிர்ந்த வண்ண உதட்டுச்சாயங்களை வாங்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!