காதலைக் கண்டடைவது மாற்றுத்திறனாளிகளுக்கு கடினமானது, சவால்மிக்கது

எல்லாரையும் போலவே, குமாரி நோர்லியானா முகமது அஜமும் மனம் கவர்ந்தவருடன் வாழ்வில் இணைய நம்பிக்கைகொண்டுள்ளார். அவருக்கு மூன்று உறவுகள் சரிப்பட்டு வராமல் போய்விட்டன.

‘உவெய்ட்ஸ்’ எனப்படும் அரிதான கண் அழற்சி நோயுடன் பிறந்த 40 வயது நோர்லியனாவுக்கு காதலுக்கான தேடல் எளிதானதாக அமையவில்லை. அவரது இடது கண்ணில் பார்வையில்லை. வலது கண்ணில் பாதிப் பார்வையே உள்ளது.

“உனக்குத்தான் பார்வையில்லையே, நீ ஏன் உறவில் இருக்க வேண்டும்?” என்று என்னிடம் சிலர் கூறியுள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் கண்காட்சி வழிகாட்டியாகப் பணிபுரியும் அவர்.

உடற்குறையுள்ளோர் இன்னமும் துணைதேடும் விஷயத்தில் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

எஸ்ஜி எனேபல் எனப்படும் இயலாமை உள்ளோருக்கான நல்வாழ்வு நிலையம் போன்ற சுய உதவி அமைப்புகளின் முயற்சிகள், உடற்குறை உள்ளவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணைய உதவுகின்றன என்றாலும் இந்த விவகாரத்தில் சவால்கள் இருக்கவே செய்கின்றன.

“அனைவரையும் உள்ளடக்கியதாக சமுதாயம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், அத்தகையவர்களில் பலர் சக்தியுள்ளவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர்,” என்று கருதுவதாக உளவியலாளர் ஓய் ஸு ஜின் கூறினார்.

எனினும், உடற்குறையுள்ள அவரது வாடிக்கையாளர்களில் சிலர், தங்களை மக்கள் ஏற்றுக்கொள்வது சவாலாக இருக்கலாம் என்று அவருடன் பகிர்ந்தனர். சில ஆண்கள் தங்கள் துணைகளை உடல் ரீதியாக கவனித்துக்கொள்வதைப் பற்றி கவலைப்படுவதாக அவர் கூறினார். அவர் ‘எ கைன்ட் பிளேஸ்’ எனும் மனநல மருந்தகத்தை 2021ல் நிறுவி, நடத்தி வருகிறார்.

உடற்குறையுள்ளவர்கள் சிலருக்கு அன்பைக் காட்டும் ஒருவருக்கும், வெறும் உடல் உறவைத் தேடும் ஒருவருக்கும் இடையில் வித்தியாசத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்று திருவாட்டி ஓய் கூறினார். அவரது வாடிக்கையாளர்களில் பலர் பாலியல் கொடுமை அல்லது உணர்ச்சி ரீதியாக காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், துணையின் குடும்ப உறுப்பினர்கள், உடற்குறையுள்ளோருடனான உறவுகளை அங்கீகரிக்காமல் இருக்கலாம்.

“சில நேரங்களில், பெற்றோரும் நண்பர்களும் தங்கள் பிள்ளைகள் அல்லது மாற்றுத்திறனாளி நண்பர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களை யாருடனாவது இணைக்க முயற்சிக்கலாம் அல்லது அவர்களை விரும்பும் எவரையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பலாம்,” என்று திருவாட்டி ஓய் கூறினார்.

“மாற்றுத் திறனாளிகள் தாங்கள் யாரை விரும்புகிறார்கள் என்பதைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்றார் அவர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட சிறிய சமூக வட்டங்களைக் கொண்டிருக்கலாம். சிலர் காதல் உறவுகளைக் கருத்தில் கொள்வதற்கான திறனைக் குறைத்து, நிதி அல்லது சுகாதாரப் பிரச்சினைகளை நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கலாம் என்று கூறினார் எஸ்பிடி எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக சேவை அமைப்பின் மூத்த சமூக சேவகர் ஏஞ்சலா சுங்.

எனினும், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ‘எ கைன்ட் பிளேஸ்’ மனநல சேவைகளுக்கு அப்பால், சமூக தொடர்புத் திறன்கள் குறித்து சிறப்புத் தேவையுடையவர்களுக்கு பயிற்சி, பயிலரங்குகளை நடத்துகிறது. பல்வேறு வகையான உறவுகள் மற்றும் மற்றவர்களுடன் பழகுவது குறித்தும் அத்தகையவர்களுக்கு கற்பிக்கிறது.

பயிலரங்கு மூலம் பாலுறவு, உறவுகள் குறித்து கற்பிக்கும் நோக்கத்துடன் உடற்குறையுள்ளோர் மக்கள் சங்கம் 2019க்கும் 2023 நடுப்பகுதிக்கும் இடையில் ஒரு திட்டத்தை நடத்தியது.

துணை தேடுவது, சிரமமான தேர்வாகவும் தடைகளைக் கொண்டதாக இருந்தாலும் அது சாத்தியமானது என்று திருவாட்டி ஏஞ்சலா சுங் கூறினார்.

அன்பைக் கண்டடைவதில் குமாரி நோர்லியானாவுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. பார்வைப் பிரச்சினை தம்மை வாழ்க்கையை முழுமையாக வாழவிடாமல் தடுக்க அவர் அனுமதிக்கவில்லை. பார்வை இல்லாதவர்களுக்கான பந்து விளையாட்டு அணியின் தேசிய விளையாட்டாளராகவும் கடல்நாகப் படகு அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

“நமக்கும் உணர்வுகள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பானவர்கள். ஒரே வேறுபாடு நமக்கு உடற்குறை உள்ளது. அவ்வளவுதான்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!