கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்றது சிங்கப்பூர் அணி

நோம்­பென்: கம்­போ­டி­யா­வில் நடந்­து­வ­ரும் 32வது தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் ஆண்­கள் கிரிக்­கெட் அணி ‘சிக்­சஸ்’ போட்­டி­யில் நேற்று தங்­கம் வென்­றது.

தரப்­பிற்கு ஆறு பேர், ஓர் இன்­னிங்­சுக்கு ஆறு ஓவர் என்ற வகை­யி­லான ‘சிக்­சஸ்’ போட்­டி­யில் சிங்­கப்­பூர், கம்­போ­டியா, பிலிப்­பீன்ஸ், இந்­தோ­னீ­சியா ஆகிய நான்கு அணி­கள் மோதின.

ஞாயிற்­றுக்­கி­ழமை தனது முதல் போட்­டி­யில் பிலிப்­பீன்­சி­டம் நான்கு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் தோற்­றுப்­போன சிங்­கப்­பூர் அணி, அடுத்த போட்­டி­யில் இந்­தோ­னீ­சி­யாவை 14 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்­தி­யது.

தொடர்ந்து, நேற்று நடந்த போட்­டி­யில் கம்­போ­டி­யாவை 26 ஓட்­டங்­களில் சிங்­கப்­பூர் தோற்­க­டித்­தது.

இவ்­விரு அணி­களும் இரண்டு போட்­டி­களில் வெற்­றி­யும் ஒரு போட்­டி­யில் தோல்­வி­யும் கண்டு, தலா நான்கு புள்­ளி­க­ளைப் பெற்­றன.

ஆயி­னும், ஓட்ட விகி­தத்­தில் முன்­னிலை பெற்­ற­தால் சிங்­கப்­பூர் அணி தங்­கத்­தைத் தட்­டிச் சென்­றது.

முன்­ன­தாக நடந்த ஆட­வருக்­கான டி20 போட்­டி­களில் சிங்­கப்­பூ­ருக்கு வெண்­க­லம் கிடைத்­தது. டி20, 50 ஓவர் போட்­டி­களில் கம்­போ­டியா தங்­கம் வென்­றது.

டி10 பிரி­வில் வெண்­க­லப் பதக்­கத்­திற்­கான போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரும் பிலிப்­பீன்­சும் இன்று மோத­வுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!