ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்த பங்ளாதேஷ்

கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் பங்ளாதேஷ் அணியும் மோதின.

இந்தியா அதன் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளைத் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுவிட்டது.

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பங்ளாதேஷ் அணி முதலில் பந்தடித்தது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்ளாதேஷ் பந்தடிப்பாளர்கள் திணறினர். அந்த அணியின் லிட்டன் தாஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் தன்சித் ஹசன் 13 ஓட்டங்களிலும் அனாமுல் ஹக் 4 ஓட்டங்களிலும் மெஹிதி ஹசன் மிராஸ் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அந்த அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன், டவ்ஹித் ஹ்ரிடோய் இருவரும் இணைந்து சிறப்பாகப் பந்தடித்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் 80 ஓட்டங்களும் டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நசும் அகமது 44 ஓட்டங்களும் மகேதி ஹசன் 29 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பங்ளாதேஷ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும் முகம்மது ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 266 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பந்தடிக்கத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 2 பந்துகளில் ஓட்டமின்றி நடையைக் கட்டினார். அடுத்து வந்த திலக் வர்மா (5 ஓட்டங்கள்), கே.எல். ராகுல்(19 ஓட்டங்கள்), இஷான் கிஷன்(5 ஓட்டங்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அரைசதத்தை நோக்கி முன்னேறிய அக்சர் பட்டேல் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 133 பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 259 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!