இளையர் முரசு

வழக்கநிலைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி, தான் விரும்பியவாறு மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வான்வெளிப் பொறிவினை தொழில்நுட்பத்தில் ஈராண்டு ‘நைட்டெக்’ படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார் தஷ்வின்வரன் பாலசுப்ரமணியம், 16.
மாற்றம் என்ற ஒன்றுதான் நிரந்தரம் என்பதற்கேற்ப, பல துறைகளிலும் அடியெடுத்துள்ள ஆல்ஹத் ரங்னேகர், 25, தனக்கு விருப்பப்பட்ட தொழில்நுட்பத் துறையில் தம் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார்.
தேசிய சேவை எவ்வாறு செயல்படும் என்பதைப் பெண்கள் அனுபவித்து பார்க்கும் வகையில் அவர்கள் அடிப்படை ராணுவப் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பை ‘அக்கோர்ட்’ எனப்படும் சமூக உறவுகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை மன்றம் அண்மையில் வழங்கியது.
பித்தளைத் தட்டிலிருந்து (Brass Plate) பிறழாத கால்களுடனும் சுடர்விடும் விளக்கை ஏந்திய கைகளுடனும் குச்சிப்புடி அரங்கேற்ற நடனமாடி பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார் 14 வயதாகும் சுதிக்‌ஷா திவாகரன்.  
நவீனமயமாகிக் கொண்டுவரும் இக்காலகட்டத்தில், கலை வடிவமாகக் கருதி தங்கள் உடற்கூறுகளை மாற்றியமைத்து அவற்றின் அழகிற்கு மெருகூட்டும் போக்கு இப்போது இளையர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. சமுதாயத்தில் அது இன்னும் நெறிகளுக்குப் புறம்பானதாகப் பார்க்கப்பட்டாலும், அக்கலையை அரவணைத்து அதில் ஈடுபடும் இளையர்களின் அனுபவங்களைக் கேட்டு வந்தது இந்த வார இளையர் முரசு.