உல‌க‌ம்

ஜோகூர் பாரு: ஜோகூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களை இரண்டு மாதங்களுக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகளுக்கு (சிஎல்கியூ) மாற்ற வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்: ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது சென்ற மாத இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது.
சாபா: மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சாபாவில் இருக்கும் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் இருந்த குழி பற்றி மற்ற வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அக்குழியில் வாழைக் கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
பேங்காக்: தாய்லாந்தின் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியைக் கலைக்கக் கோரி பிப்ரவரி 1ஆம் தேதியன்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
நியூயார்க்: விமானத்தில் 14 வயதுச் சிறுமிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது, சுய இன்பம் அனுபவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இந்திய-அமெரிக்க மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.