உல‌க‌ம்

எடின்பர்க்: பிரிட்டன் தன்வசம் இருக்கும் இரண்டு பாண்டா கரடிகளை விரைவில் சீனாவுக்குத் திரும்பி அனுப்பும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் அமெரிக்க அரசதந்திரி ஹென்ரி கிசிஞ்சர், 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடைய வழிவகுத்தவர் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சரக்குக்கிடங்கிற்கான கட்டுமானத் தளம் இடிந்து விழுந்ததில் மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். இருவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாரிஸ்: பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி என்பவரின் தலையை 2020ஆம் ஆண்டில் பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட நபர் துண்டித்ததை அடுத்து அச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயதினர் அறுவர், பொதுமக்கள் பார்வையிட முடியாத நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகினர்.
ஹாங்காங்: உலகின் ஆகச் செலவுமிக்க நகரங்களில் சிங்கப்பூரும் சுவிட்சர்லாந்தின் ஸூரிக்கும் பட்டியலின் முதல் இடத்தில் வந்துள்ளன.