தொழிலதிபர் ஜார்ஜ் கோ அதிபர் தேர்தலில் போட்டி

சிங்­கப்­பூர் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தாக 63 வயது தொழி­ல­தி­பர் ஜார்ஜ் கோ சிங் வா அறி­வித்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஹார்வி நோர்­மன் சில்­லறை விற்­ப­னைக் கடையை சிங்­கப்­பூ­ருக்கு கொண்­டு­வந்த இவர், சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யில் இடம்­பெ­றும் ஓசியா இன்­டர்­நே­ஷ­ன­லின் குழும நிர்­வா­கத் தலை­வ­ராக உள்­ளார்.

கடந்த 2017 முதல் சிங்­கப்­பூ­ரில் வசித்­த­ப­டியே மொராக்­கோ­வுக்­கான தூத­ராக பதவி வகித்து வரும் இவர், அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக ஜூன் 9ஆம் தேதி அப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­தினம் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தாக ஜூன் 8ஆம் தேதி அறி­வித்­தார். ஜூலை 7ஆம் தேதி மக்­கள் செயல் கட்­சி­யில் இருந்­தும் மூத்த அமைச்­சர், சமூக கொள்கை ­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் பத­வி­களில் இருந்­தும் வில­கு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் பத­விக்­கா­லம் செப்­டம்­பர் 13ஆம் தேதி முடி­வ­டை­கிறது. மீண்­டும் போட்­டி­யி­டப் போவ­தில்லை என்று அவர் கூறி­யுள்­ளார்.

“ஆளும் கட்­சி­யு­டன் மிக­வும் நெருக்­க­மாக இருப்­ப­தால், அதி­பர் ஆவ­தற்கு (திரு தர்­மன்) சரி­யா­ன­வரா என்­ப­து­தான் கேள்வி. குறிப்­பாக, தேசிய இருப்பு, முக்­கிய பொதுத் துறை நிய­ம­னங்­கள் தொடர்­பான இரு முக்­கி­ய­மான அங்­கங்­களில் அர­சாங்­கத்தை சரி­பார்ப்­ப­தில் அதி­ப­ரின் பங்­கைக் கருத்­தில் கொள்­ளும்­போது,” என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட திரு கோவின் அறிக்­கை கூறியது.

“அதி­பர் பத­வி­யின் நேர்­மையைப் பேணு­வ­தற்கு, அதி­பர் அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­ட­வ­ராக இருப்­ப­தோ­டல்­லா­மல், அப்­ப­டிப்­பட்ட எண்­ணம் நிலவ வேண்­டும்,” என்று அதில் குறிப்­பிட்­டுள்­ளார்.

திரு கோ சுயேச்சை வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வார் என அறிக்கை கூறி­யது.

விளை­யாட்டுத் துறை பொருள்­களுக்­கான சில்­லறை விற்­ப­னைக் கடை­யான வேர்ல்ட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நடத்­தும் நிறு­வ­னம் உள்­பட சிங்­கப்­பூர், பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களில் ஏழு பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு திரு கோ உரி­மை­யா­ள­ராக உள்­ளார் என அவ­ரது தனிப்­பட்ட இணை­யத்­த­ளம் குறிப்­பி­டு­கிறது.

அவ­ரும் அவ­ரது மனைவி லைசா சுமா­லி­யும் இணைந்து 2015ல் ‘பார்­டர் மிஷன்’ தொண்டு நிறு­வ­னத்தை நிறு­வி­னர். இது சிங்­கப்­பூர், இம­ய­மலைப் பகுதி மற்­றும் வள­ரும் நாடு­களில் தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கிறது.

திரு கோ அதி­பர் பதவிக்குப் போட்­டி­யிட தகுதி பெறு­வாரா என்­பது தெளி­வாக இல்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அரசியல் கணிப்­பா­ளர்­கள் கூறி­னர்.

தனி­யார் துறை­யி­ன­ருக்­கான தகு­தியைப் பூர்த்தி செய்ய, ஒரு­வர் ஒரு நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யாக குறைந்­தது மூன்று ஆண்­டு­கள் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்­டும். அந்த நேரத்­தில் நிறு­வ­னம் சரா­ச­ரி­யாக குறைந்­தது $500 மில்­லி­யன் பங்­கு­தா­ரர்­க­ளின் பங்­கு­களை வைத்­தி­ருக்க வேண்­டும். வரிக்­குப் பிறகு லாபம் ஈட்­டி­யி­ருக்க வேண்­டும். மூன்­றாண்டு காலம், அண்­மைய கால­கட்­ட­மாக இருக்க வேண்­டும்.

அத்­த­கைய நிறு­வ­னத்­தில் ஆக மூத்த அதி­கா­ரி­யாக இருந்த ஒரு­வர் தகுதி பெற­லாம் என்­றும் சட்­டம் கூறு­கிறது.

வால் ஸ்தி­ரீட் ஜர்­ன­லின் சந்­தைத் தர­வு­க­ளின்­படி, 2021 முதல் 2023 வரை ஓசியா இன்­டர்­நே­ஷ­ன­லில் பங்­கு­தா­ரர்­க­ளின் பங்கு­களில் சரா­ச­ரி­யாக $50m இருந்­தது.

சிங்­கப்­பூர் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பும் வேட்­பா­ளர்­கள் இன்று முதல் விண்­ணப்­பிக்­க­லாம். இந்த அதி­பர் தேர்­த­லில் அனைத்து இனத்­த­வ­ரும் போட்­டி­யி­ட­லாம். பிர­த­மர் லீ சியன் லூங் தேர்­தல் ஆணையை வெளி­யி­டு­வார். விண்­ணப்­பங்­களை ஏற்­பது ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு முடி­வு­றும். தகுதி பெறு­வோர் நிய­மன நாளுக்கு முன்­னர் அறி­விக்­கப்­ப­டு­வர்.

தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பு­வோர் தகு­திச் சான்­றி­த­ழுக்­கான விண்­ணப்­பத்தை அதி­பர் தேர்­தல் குழு­வி­டம் (பிஇசி) இன்று முதல் விண்­ணப்­பிக்­க­லாம்.

வேட்­பா­ளர் எந்த இனப்­பி­ரி­வைச் சேர்ந்­த­வர் என்­பதை நிர்­ண­யிக்க, மூன்று துணைக் குழுக்­களை உள்­ள­டக்­கிய சமூகக் குழு­வி­டம் அவர்­கள் இனத் தகு­தி­நிலை உறு­தி­யளிப்பை சமர்ப்­பிக்க வேண்­டும். இது அடுத்த இட ஒதுக்­கீட்­டுத் தேர்­தல் எப்­போது நடத்­தப்­படும் என்­பதை தீர்­மா­னிப்­பதற்­காக என்று தேர்­தல் துறை தெரி­வித்­தது.

விண்­ணப்­பப் படி­வங்­களை இன்று முதல் தேர்­தல் துறை அலு­வ­ல­கத்­தில் பெற்­றுக்­கொள்­ள­லாம். தனது இணை­ய­த்த­ளத்­தின் மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­மாறு தேர்­தல் துறை ஊக்­கு­விக்­கிறது.

தேர்­தல் ஆணை வெளி­யி­டப்­படும் தேதி­யில், ஏனைய தகு­தி­க­ளு­டன் பொதுத்­துறை அல்­லது தனி­யார் துறை­யில் வேலைத் தகு­தி­யைப் பெற்­றி­ருந்­தால் அவர் அதி­பர் வேட்­பா­ள­ரா­கத் தகுதி பெறு­வார்.

எடுத்­துக்­காட்­டாக, தனி­யார் துறை பின்­ன­ணி­யைக்­கொண்ட விண்­ணப்­ப­தா­ரர், குறைந்­த­பட்­சம் $500 மில்­லி­யன் பங்­கு­தா­ரர்­க­ளின் பங்­கு­க­ளைக்­கொண்ட நிறு­வ­னத்தை கடந்த மூன்­றாண்­டு­கள் தலைமை தாங்கி வழி­ந­டத்­தி­யி­ருக்க வேண்­டும்.

விண்­ணப்­ப­தா­ரர்­கள் நேர்மை, நல்ல குணம், நற்­பெ­யர் உள்­ள­வர்­க­ளா­க­வும் இருக்க வேண்­டும்.

அதி­பர் தேர்­தல் குழு­வுக்கு, பொதுச் சேவை ஆணை­யத்­தின் தலை­வர் திரு லீ சூ யாங் தலைமை தாங்­கு­கி­றார்.

பொதுச் சேவை ஆணை­யத்­தின் உறுப்­பி­ன­ரான திரு எட்­வர்ட் டி சில்வா சமூ­கக் குழு­வின் தலை­வ­ராக உள்­ளார். சீன, மலாய், இந்­திய மற்­றும் பிற சிறு­பான்மை துணைக் குழுக்­களும் உள்­ளன. ஒவ்­வொரு குழு­வி­லும் தலை­வ­ரும் நான்கு உறுப்­பி­னர்­களும் உள்­ள­னர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!