லாரன்ஸ் வோங்: வாழ்வில் வெற்றி என்பது அவரவரைப் பொறுத்தது

அர­சாங்­கம், சிங்­கப்­பூ­ரர்­கள் இடையே கடந்த ஓராண்­டாக நடை­பெற்­று­வ­ரும் கலந்­து­ரை­யா­டல் மூலம் புத்­து­ணர்ச்சி பெற்ற, கட்­டி­றுக்­க­மான சமு­தா­யம் என்­பது குறித்து ஒரு­மு­க­மான சிந்­தனை உரு­வா­கி­யுள்­ளது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் புதிய கட்­டி­றுக்­கம் வாழ்­வில் வெற்றி, திறன்­கள் குறித்து ஒரு புதிய கண்­ணோட்­டத்தை மைய­மா­கக்கொண்­டது. அந்­தக் கண்­ணோட்­டம், திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட சமூக ஆத­ர­வு­டன் ஒற்­று­மை­யு­ணர்வு பற்­றிய புதிய சிந்­த­னை­யை­யும் கொண்­டி­ருக்­கும் என்­றார் திரு வோங்.

பொதுக் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் 35வது ஆண்­டு­நி­றை­வில் பேசிய திரு வோங், சிர­ம­மான வெளி­நாட்­டுச் சூழ­லில் உள்­ளூ­ரில் நாம் எதிர்­நோக்­கும் சவால்­க­ளை­யும் மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

எனி­னும், வாழ்­வில் வெற்றி என்­பதை அவ­ர­வர் முடிவு செய்து­கொள்ள வேண்­டும். இதில் குறிப்­பிட்ட ஓர் அள­வு­கோல் இல்லை என்­றும் அவர் விளக்­கி­னார்.

ஆழ­மா­கப் பதிந்­தி­ருக்­கும் மனப்­போக்கை மாற்­று­வது அவ­சி­யம். ஆனால், அது எளி­தான ஒன்­றல்ல என்­றார் அவர்.

மேலும், தகுதி அடிப்­படை என்­பது வாழ்­வின் ஆரம்­ப­கா­லத்­தில் பெறும் பள்­ளிக்­கல்­வி­யு­டன் முடிந்­து­வி­டு­வ­தில்லை. மாறாக, தகுதி அடிப்­படை என்­பது தொடர்ச்­சி­யான ஒன்று என்­றும் அது வாழ்­வின் பல்­வேறு கட்­டங்­களில் கிடைக்­கப் பெறும் கற்­கும் வாய்ப்­பு­க­ளு­டன் இணைந்த ஒன்று என்­றும் அவர் கூறி­னார்.

சமூக ஆத­ர­வைப் பொறுத்­த­வ­ரை­யில், பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பிரி­வி­னர் தங்­க­ளின் சூழ்­நி­லை­க­ளைத் தாங்­களே கட்­டுக்­குள் கொண்­டு­வந்து அதை விரைந்து சமா­ளிப்­ப­தில் தாங்­களே பொறுப்­பேற்­றுக்­கொள்­ளும் வகை­யில் சிங்­கப்­பூர் அதன் சமூகப் பாது­காப்­புக் கட்­ட­மைப்பை வடி­வ­மைப்­ப­தில் கவ­ன­மாக உள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் நிலை­யற்ற, கணிக்க முடி­யாத சூழலை எதிர்­கொள்­வ­தால், நடுத்­தர மற்­றும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள் பின்­தங்­கி­வி­டா­மல் இருக்க அர­சாங்கம் அதி­கம் செய்­யும் என்­றார் அவர்.

ஒற்­றுமை உணர்­வைப் பொறுத்­த­வரை, “நாம்”, “நமது”, “நம்­மு­டை­யது” என்­பதே சமூ­கத்­திற்கு அதி­கம் தேவை. எவ­ரும் தனி­யாக வெற்றி பெறு­வ­தில்லை. ஒவ்­வொரு வெற்­றிக் கதை­யும் பகி­ரப்­பட்ட கதை. நாங்­கள் அனை­வ­ரும் எங்­க­ளுக்கு முன் வந்­த­வர்­க­ளின் தோள்­களில் நிற்­கி­றோம்,” என்று திரு வோங்கூறி­னார்.

ஒவ்­வொரு குழு­வும் அதன் வேரை­யும் அடை­யா­ளத்­தின் ஒரு பகு­தி­யான பண்­பாடு, மர­பு­களையும் கொண்­டாட வேண்­டும் என்று அர­சாங்­கம் விரும்­பு­கிறது. அதே வேளை­யில், தங்­கள் சொந்த சமூ­கங்­க­ளைத் தாண்டி சிங்­கப்­பூ­ரர்­க­ளாக பொது­வான சிந்­த­னையை விரி­வு­ப­டுத்த அனை­வ­ரை­யும் ஊக்­கு­விக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!