கட்டடம் இடிந்து விழுந்தது; ஊழியரைக் காணவில்லை

தஞ்­சோங் பகா­ரில் கட்­ட­டத்தை இடிக்­கும் பணி­யில் ஈடுபட்ட ஊழி­யர் ஒரு­வர் காணா­மல் போனார். ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்­டடம் இடிக்கப்படும்போது ஒரு பகுதி சரிந்து விழுந்­தது. இதில் ஊழி­யர் சிக்­கி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

நேற்று பிற்­ப­கல் இரண்டு மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்து அங்கு வந்த சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் ஊழி­யரை மீட்­கும் பகீ­ரத முயற்­சி­யில் ஈடு­பட்­டனர்.

தீய­ணைப்­பா­ளர்­கள், மீட்­புப் பணி­யா­ளர்­கள், அவ­ச­ர­கால மருத்­துவ சேவை ஊழி­யர்­கள் உட்­பட எழு­ப­துக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­திற்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். ஏறக்­கு­றைய 11 அவ­ச­ர­கால வாக­னங்­களும் பயன்படுத்தப்பட்டன.

மரினா பே தீய­ணைப்பு நிலை­யத்­தின் அதி­கா­ரி­கள், பேரி­டர் உதவி மீட்­புக் குழு­வைச் சேர்ந்த மீட்பு நிபு­ணர்­கள் மற்­றும் இரண்டு மோப்ப நாய்­கள் காணா­மல்­போன ஊழி­யரைத் தேடி­ய­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் குறிப் பிட்டார்.

பெரிய விபத்­து­களில் மீட்பு வேலை­ களுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ‘எம்­டிஏ’ சிறப்பு வாகன­ மும் சம்­பவ இடத்­தில் காணப்­பட்­டது.

அய்க் சன் டிமா­லி­ஷன் அண்ட் இன்­ஜி­னி­ய­ரிங் என்ற நிறு­வ­னம் கட்­ட­டத்தை இடிக்­கும் பணியில் ஈடுபட்டது.

அந்­நி­று­வ­னத்­தின் பிர­தி­நி­தி­யுடன் தொடர்­பு­கொண்­ட­போது, இடி­பா­டு­கள் சரிந்­த­தற்­கான கார­ணத்தை அறிய அவ­கா­சம் தேவை என்­றார்.

கட்­ட­டத்­தின் ஒரு பகுதி சரிந்­து­வி­ழுந்­த­போது பெரிய சத்­தம் எழுந்­தது. ஆனால் இது வழக்­க­மான சத்­தம் என்று எண்­ணி அரு­கில் இருப்­ப­வர்­கள் அக்­கறை காட்­ட­வில்லை.

“முத­லில் சத்­தம் கேட்­ட­போது எனக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை. அதற்­குப்­பின் என் வேலை இடத்­தில் உள்­ள­வர்­கள் கட்­ட­டம் இடிந்து விழுந்­த­தைப் பற்றிப் பேச ஆரம்­பித்­த­னர். அதில் ஒரு­வர் சிக்­கி­யுள்­ளார் என்­றும் கூறி­னர்,” என்று அரு­கில் உள்ள கட்­ட­டத்­தில் பணியாற்றும் வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

காணாமல்போன ஊழியரை நேற்று மாலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!