ஆயுதப் பயன்பாடு குறித்து அமெரிக்காவிடம் உறுதியளித்த இஸ்ரேல்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்களை மனித உரிமை மீறல் தொடர்பான செயல்களுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளது.

அந்த தகவலை அமெரிக்கா புதன்கிழமை அன்று வெளியிட்டது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையை அடுத்து இஸ்ரேல் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் கொடுத்திருந்தது.

இஸ்ரேல் உறுதியளித்தபடி நடக்கிறதா இல்லையா என்பதை அமெரிக்க அதிகாரிகள் மே மாதத்தில் ஆய்வு செய்து தகவல் தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டார். அதில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மனித உரிமை மீறல் செயல்களுக்கு தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஸா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் தான் மேற்கொண்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 50 துப்பாக்கிக்காரர்களை கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று தெரிவித்தது.

அல் ஷிஃபா மருத்துவமனையில் போராளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைத் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.

இதுவரை அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் போராளிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. அதில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!