முதியோர் துன்புறுத்தல்: தடுப்பது சமுதாயத்தின் பொறுப்பு

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதியோர் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக ஐநா அனுசரிக்கிறது. முதியோர் துன்புறுத்தல் நிரந்தர உடல், மனநல பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சில நேரங்களில் மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியது என்பதால் இந்தப் பிரச்சினைக்கு ஐநா முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு முதியோர் துன்புறுத்தல் சம்பவங்கள் சிறிதளவு மட்டுமே உயர்ந்துள்ளதாக செய்தித் தகவல் கூறுகிறது. இந்தத் தகவல் கவலை தரக்கூடிய ஒன்று என சட்டென்று சொல்லிவிடலாம்.

ஆனால், இதைவிட கவலை தரும் வேறோர் அம்சம் என்னவென்றால், அது முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர் தங்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தடுமாறும் நிலை. முதியோர் துன்புறுத்தலுக்கு பல காரணங்கள் கூறப்படலாம்.

எனினும், உடல்நல, மனநலப் பிரச்சினைகளுடன் போராடும்  பராமரிப்பாளர்களுக்கு குடும்ப முதியோர் ஒருவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஏற்படும்போது அவர்கள் மனஉளைச்சலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது சில சந்தர்ப்பங்களில் துன்புறுத்தலுக்கு வழிவிடுகிறது.

இதில் அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அல்லது பராமரிப்பாளர் மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது,  அவர் முதியோருக்கு உடல்ரீதியாக துன்புறுத்தல் தருகிறார் அல்லது முதியோரின் தேவைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார். பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியோர், சிறார் ஆகியோருக்கு எதிரான துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது.

இந்நிலையில், முதியோர் துன்புறுத்தல் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்னவென்றால், உறவுகளுக்கு இடையே நிகழும் துன்புறுத்தல் சம்
பவங்களை முடிவுக்கு கொண்டுவர, அந்தப் பிரச்சினைக்கு ஒட்டுமொத்த தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதே.

இதில் முதியோர், அவரை கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர் ஆகிய இருதரப்பினரின் தேவைகளையும் நாம் கவனத்தில் கொண்டு  தீர்வு காண வேண்டும். மிக மோசமான துன்புறுத்தலில் ஒருவர் ஈடுபடுபவராக இருந்தாலன்றி அவரை தண்டிப்பதில் அர்த்தமில்லை.

உதாரணமாக, வயது வந்த பிள்ளை ஒன்று தமது பெற்றோரை அளவுக்கு அதிகமாக சார்ந்திருந்து, எடுத்ததற்கெல்லாம் அவர்களிடம் பணம், மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்பது ஒருவகையான துன்புறுத்தல் எனப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு பிள்ளை, தான் கேட்பது கிடைக்கவில்லை என்றால் வன்முறையை கையில் எடுப்பதை ஒருவகைத் துன்புறுத்தல் என்று கூறலாம். இதுபோன்ற துன்புறுத்தல் பராமரிப்பதில் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக வரும் ஒன்றல்ல.

மாறாக, பாசப் பிணைப்பில் கட்டுண்ட பெற்றோர் நியாயமற்ற கோரிக்கைகளை எழுப்பும் வயது வந்த பிள்ளையைத் தாங்கிப் பிடிப்பதால் ஏற்படும் துன்புறுத்தல். இப்படிப்பட்ட நிலையில், பெற்றோர் உள்ளுணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில், தேவை ஏற்பட்டால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெற்றோரை அவர்களின் பிள்ளையிடமிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றி அவர்களைப் பாதுகாப்பது அவசியம்.

இந்த மாதிரி சூழ்நிலையை சமாளிப்பதற்கு சிங்கப்பூர் இதற்கென்றே ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

சமூக சேவை நிலையங்கள் நடத்தும் குடும்ப சேவை மையங்கள் குறைந்த அளவு அபாயமுள்ள குடும்பப் பிரச்சினைகளை கையாள்கின்றன. மற்றபடி, முதியவர் ஒருவரின் பாதுகாப்புக்கும் உடல்நலத்துக்கும் அதிக அபாயம் ஏற்படுத்தக்கூடிய சூழல் இருக்குமாயின் அவர் ‘அடல்ட் புரொடெக்டிவ் சர்விஸ்’ எனப்படும் அமைச்சின் வயது வந்தோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சேவை மையத்தின் பொறுப்பில் விடுவர். மேலும், மிகுந்த அபாயமில்லாமலும், குறைந்த அபாயமில்லாமலும் நடுத்தர அபாயத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க அவர்கள் குடும்ப வன்முறையைக் கையாள்வதில் நிபுணர்களாக உள்ளவர்களைக் கொண்ட மூன்று மையங்களின் பாதுகாப்பில் விடப்படுவர்.

ஆற்றொணாத் துயரத்தில் சிக்கித் தவிக்கும் முதியோருக்கு இந்த மையங்கள் தகுந்த மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தரும். இவை எல்லாம் சரிதான். ஆனால், முதியோரை துன்புறுத்தலிலிருந்து காக்க வேண்டுமெனில், முதலில் அவர்கள் தானாக உதவி தேடி முன்வர வேண்டும், அல்லது அக்கம்பக்கத்தார் அண்டை வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து அமைப்புகளுக்கு விழிப்பூட்டவேண்டும். இதற்கு சமுதாயம்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!