சீ ஹொங் டாட்: பேரங்காடிகளின் முடிவு பாட்டாளிக் கட்சியின் பரிந்துரையினால் அல்ல

பொருள், சேவை வரி 9 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஒரு விழுக்காடு அதிகரிப்பினால் ஏற்படும் செலவைத் தற்காலிகமாக ஏற்பதாக சில பேரங்காடிகளும் சில்லறை வர்த்தகர்களும் தெரிவித்திருப்பது பாட்டாளிக் கட்சியின் பரிந்துரையினால் அல்ல என்று நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

தாமும் செங்காங் குழுத் தொகுதியைச் சேர்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ டிங் ருவும் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பரிந்துரையைப் போலவே பேரங்காடிகள் தள்ளுபடிகளை வழங்குவதாகப் பாட்டாளிக் கட்சியின் ஜேமஸ் லிம் தெரிவித்திருப்பது சரியல்ல என்று திரு சீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 10ஆம் தேதியன்று பதிவிட்டார்.

பொருள், சேவை வரி அதிகரிப்பால் உணவுப்பொருள்கள், தனிநபர் பராமரிப்புப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான கூடுதல் செலவை ஏற்க ஜயன்ட், சாங்கி விமான நிலையம், ஃபேர்பிரைஸ் போன்ற பெரிய வர்த்தகர்கள் முடிவெடுத்திருப்பதை இணைப் பேராசிரியர் லிம் சுட்டினார்.

“சில வர்த்தகர்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவு நானும் ஹெ டிங் ருவும் நாடாளுமன்றத்தில் முன்பு முன்வைத்தோம். ஆனால் அது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல என்று அப்போது உதறித் தள்ளப்பட்டது.

“ஆனால், அதையே வர்த்தகர்கள் நடப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். நாங்கள் முன்வைத்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே என்பதை இது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, பயனீட்டாளர்களும் அதையே விரும்புகின்றனர்,” என்று இணைப் பேராசிரியர் லிம் தெரிவித்திருந்தார்.

இதை திரு சீ ஏற்க மறுத்தார்.

இணைப் பேராசிரியர் லிம்மும் திருவாட்டி ஹெவும் குறிப்பிட்ட சில பொருள்களுக்குப் பொருள், சேவை வரியை விதிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் பரிந்துரை செய்ததாக திரு சீ தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, உணவுப் பொருள்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு போன்ற சேவைகளுக்கான பொருள்,சேவை வரியை நீக்க வேண்டும் என்று திருவாட்டி ஹெ அழைப்பு விடுத்திருந்தார். ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் அவ்வாறு செய்வதாக அவர் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கான பொருள், சேவை வரியை அல்லது குறைந்தபட்சம் பொருள், சேவை வரி அதிகரிப்பைத் தற்காலிகமாக விலக்க வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இணைப் பேராசிரியர் லிம் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கான பொருள், சேவை வரிக்கு விலக்கு அளிப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று தெரிவித்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அதற்கான காரணத்தை விளக்கியதாக திரு சீ கூறினார்.

அவ்வாறு செய்த நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாக திரு வோங் தெரிவித்திருந்ததை திரு சீ நினைவூட்டினார்.

இருப்பினும், பொருள், சேவை வரியால் ஏற்படும் செலவை ஏற்க வர்த்தகர்கள் முடிவெடுத்தால் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனத் திரு சீ தெரிவித்தார்.

இணைப் பேராசிரியர் லிம் கூறுவதற்கு மாறாக, தள்ளுபடிகளை வழங்கக் கோரி பேரங்காடிகளுடனும் வர்த்தகர்களுடனும் அயராது இணைந்து செயல்பட்ட பெருமை துணை அமைச்சரும் மேயரும் ஆன லோ யென் லிங்கையும் அளவுக்கு மீறிய லாபம் ஈட்டுவதற்கு எதிரான அவரது குழு (சிஏபி) உறுப்பினர்களையும் சேரும் என்று திரு சீ கூறினார்.

பொதுக் கொள்கைகள் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளை அரசாங்கம் வரவேற்கும்போதிலும் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று திரு சீ வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!