இளவரசர் திருமணத்தில் பங்கேற்க பிரதமர் லீ புருணை பயணம்

புருணை இளவரசர் அப்துல் மட்டீன், குமாரி அனிஷா ரோஸ்னா இருவரது திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் லீ சியன் லூங் ஜனவரி 13 முதல் 15 வரை புருணை செல்கிறார்.

பிரதமர் லீயை இளவரசர் மட்டீனின் தந்தையான புருணை சுல்தான் ஹசானல் போல்கியா அழைத்துள்ளார். பிரதமர் லீயுடன் திருமதி லீ, மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் செல்கின்றனர்.

ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் அரச திருமணச் சடங்கிலும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் அரச விருந்திலும் அவர்கள் பங்கேற்பர். அரச விருந்துக்கு முன்னதாக பிரதமர் லீயும் திருமதி லீயும் மன்னர் போல்கியா, அவருடைய துணைவியார் இருவரையும் சந்திப்பர்.

பிரதமர் லீயின் பயணத்தின்போது, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராக இருப்பார்.

பண்டார் ஸ்ரீ பெகாவானில் உள்ள தங்கத்தாலான பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி திருமணச் சடங்கு நடைபெற்றது. மணமகளுக்குச் சடங்கு நடைபெறுகிறது. படம்: ஏஎஃப்பி
பண்டார் ஸ்ரீ பெகாவானில் உள்ள தங்கக் கூரை வேய்ந்த பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி திருமணச் சடங்கு நடைபெற்றது. மணமகனுக்குச் சடங்கு. படம்: ஏஎஃப்பி

32 வயதான இளவரசர் மட்டீன், ஜனவரி 11ஆம் தேதி 29 வயதான செல்வி அனிஷா ரோஸ்னாவை மணந்தார். பத்து நாள் திருமணக் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெறுகிறது.

பண்டார் ஸ்ரீ பெகாவானில் உள்ள தங்கக் கூரை வேய்ந்த பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி திருமணச் சடங்கு நடைபெற்றது.

கொண்டாட்டத்தின் உச்சமாக ஜனவரி 14 அன்று அரச மாளிகையில் பெரிய அளவிலான அரச சடங்கும் ஊர்வலமும் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!