ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கியுள்ள பெக்கம், ரொனால்டோ

ஹாங்ஜோ: உலகப் புகழ்பெற்ற காற்பந்து ஆட்டக்காரர்களின் பெயர்களைக் கொண்டுள்ள இரு இந்திய விளையாட்டாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

டேவிட் பெக்கம் எல்கத்தோசூங்கோ, 20, ரொனால்டோ சிங் லாய்தோஞ்சம், 21, என்ற அவ்விருவரும் இந்தியா சார்பில் மிதிவண்டியோட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

எல்கத்தோசூங்கோவின் தந்தை இந்தியக் காற்பந்து அணிக்காக விளையாடியுள்ளோர். மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தீவிர ரசிகரான அவருக்குப் பிடித்தமான ஆட்டக்காரர் டேவிட் பெக்கம்.

“நான் பிறப்பதற்குமுன் எனக்கு என்ன பெயர் வைப்பதென்று மருத்துவமனையில் என் பெற்றோர் ஆலோசனை செய்தனர். ‘பையனாக இருந்தால் அவனது பெயர் டேவிட் பெக்கம்’ என்று என் தந்தை சொல்லிவிட்டார்,” என்று இந்தியாவின் பெக்கம் நினைவுகூர்ந்தார்.

பையனே பிறந்ததால் எல்கத்தோசூங்கோவின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தந்தையின் தாக்கத்தால் சிறுவயதில் காற்பந்து விளையாடிய எல்கத்தோசூங்கோ, பின்னர் தனது 14 வயதில் மிதிவண்டியோட்டத்திற்கு மாறினார்.

“கடந்த ஐந்தாண்டுகளாக இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். படிப்படியாக தொழில்முறை மிதிவண்டியோட்டியாக மாறிவிட்டேன்,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்காக பர்மிங்ஹம் சென்றபோது, பிரிட்டிஷ் குடிநுழைவு அதிகாரிகள் தன்னை நிறுத்திவைத்து, இருமுறை தன் கடப்பிதழைச் சரிபார்த்த பின்னரே தன்னை அந்நாட்டிற்குள் விட்டதாக எல்கத்தோசூங்கோ குறிப்பிட்டார்.

இவரைப் போலவே, சக மிதிவண்டியோட்டி ரொனால்டோவிற்கும் அப்பெயர் சூட்டப்பட்டதற்கு அவருடைய தந்தையின் காற்பந்து ஆர்வமே காரணம்.

லாய்தோஞ்சமின் தந்தை முன்னாள் பிரேசில் வீரர் ரொனால்டோவின் பரம ரசிகர்.

கடந்த 2002 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்போது லாய்தோஞ்சமின் தந்தை காஷ்மீரில் பணியாற்றி வந்தார். அப்போது, இங்கிலாந்து-பிரேசில் அணிகள் மோதிய காலிறுதிப் போட்டியில் ரொனால்டின்யோ கோலடிப்பார் என்று தம் நண்பர்களிடம் பந்தயம் கட்டினார்.

அவ்வாறே ரொனால்டின்யோவும் கோலடிக்க, பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அப்போட்டி முடிந்ததும் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் தன் மனைவிக்கு மகப்பேற்று வலி எடுத்துள்ளதாகத் தொலைபேசிவழி அவருக்குத் தகவல் வந்தது.

“அன்றைய நாளில் என் தந்தை பந்தயத்தில் வென்று பணம் ஈட்டினார். அதனால் ரொனால்டின்யோ என்ற பெயர் ராசியானது என நினைத்து, எனக்கும் ரொனால்டோ எனப் பெயர் சூட்டிவிட்டார்,” என்று லாய்தோஞ்சம் நினைவுகூர்ந்தார்.

ரொனால்டின்யோ என்றால் குட்டி ரொனால்டோ என்று பொருள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவ்விருவரும் பங்கேற்பது இதுவே முதன்முறை. செவ்வாய்க்கிழமை நடந்த ஆடவர் குழு ‘ஸ்பிரின்ட்’ போட்டியில் அவர்கள் ஐந்தாமிடத்தில் முடித்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார் பெக்கம். புதன்கிழமை காலை நடக்கவுள்ள காலிறுதியில் அவர் ஜப்பானின் காயா ஓட்டாவுடன் மோதவுள்ளார். அத்துடன், ஆடவர்க்கான ‘கெய்ரின்’ பிரிவிலும் அவர் போட்டியிடவுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!