உல‌க‌ம்

கீவ்: உக்ரேன் அமைதித் திட்டத்திற்கு உதவும் ஆக அண்மைய நடவடிக்கைகளில் ஒன்றாக, வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனும் சுவிட்சர்லாந்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை நடத்த உள்ளன.
நியூயார்க்: 2023 புத்தாண்டு பிறக்கவிருந்த வேளையில் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் அருகே நான்கு காவல்துறை அதிகாரிகளை வெட்டுக்கத்தியால் தாக்கிய குற்றத்தை 20 வயது ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார். 2022 டிசம்பர் 31ஆம் தேதி இரவில் தாக்குதலை நடத்தியபோது டிரவோர் பிக்ஃபோர்ட் எனப்படும் அந்த ஆடவரின் வயது 19.
யங்கூன்: வடக்கு மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி, ஆளும் ராணுவத்துடன் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அக்குழுக்களில் ஒன்றான டிஎன்எல்ஏ-இன் தலைவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
லண்டன்: ஐரோப்பா முழுவதும், வெப்பநிலை இவ்வார இறுதியில் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்.
லண்டன்: ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் மூளை வீக்கத்தைத் தரக்கூடிய நிபா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை மனிதர்களுக்கிடையே சோதனை செய்யத் தொடங்கிவிட்டதாக வியாழக்கிழமை (ஜனவரி 11) அறிவித்தது.