You are here

சிங்க‌ப்பூர்

காருக்கு அடியில் சிக்கிய சிறுவனை மீட்க பத்து பேர் விரைந்தனர்

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஒன்பது வயது சிறுவனை மீட்க நாலா புறத்திலிருந்தும் பத்துப் பேர் விரைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 3.50 மணிக்கு பள்ளிச் சீருடை அணிந்திருந்த அச்சிறுவன் ‘ஸீப்ரா’ சாலைக் கடப்பில் கடக்கும்போது ஒரு கார் அவனை மோதியது என்று ‌ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

வேலையிடக் காயங்களை குறைக்க ‘சேஃப் ஹேண்ட்ஸ்’

கை மற்றும் விரல் காயங்கள் அவற்றின் துண்டிப்புக்கு இட்டுச் செல்லும். எனவே அதுபற்றிய விழிப் புணர்வை அதிகரிக்கும் நோக்கில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ‘சேஃப் ஹேண்ட்ஸ்’ என்னும் பிரசார இயக்கத்தை நேற்று தொடங்கியது. இது இம்மன்றத்தின் மூன்றாவ தும் இறுதிக்கட்டமுமான வேலை யிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரசார இயக்கமாகும். இதற்கு முன்னர் இரு கட்டங்களாக பிர சார இயக்கத்தை அது நடத்தி யது. இந்தப் புதிய பிரசார இயக்கம் கீழே விழுதல் மற்றும் வாகன விபத்துகள் தொடர்பான விழிப் புணர்வின் மீது கவனம் செலுத்தும்.

நோயாளிகளின் குடும்பத்துக்கு ஓய்வறை

மனநல சுகாதாரக் கழகத்தில் உள்ள இளைய நோயாளிகளின் குடும்பத்தினரும் பராமரிப்பாளர் களும் சிறு ஓய்வு எடுத்துக்கொள் வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த 59 சதுர மீட்டர் பரப்பளவுள்ள ஓய்வறை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைக் கப்பட்டது.

விண்வெளித்துறையில் ஆயிரம் வேலைகள் உருவாகும் வாய்ப்பு

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக் குள் ஆயிரம் புதிய வேலைகளை உருவாக்கக்கூடிய விண்வெளித் துறை உருமாற்றத் திட்டம் வெளி யிடப்பட்டுள்ளது. தொழில்துறை பங்காளிகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆகியவற்றுடன் கூட் டிணைந்து பல்வேறு அமைப்புகள் ஒன்றாக உருவாக்கிய விண் வெளித்துறை உருமாற்றத் திட்டம், வருங்காலத்திற்கு உகந்த விண் வெளித்துறையை உருவாக்குவதற்கான உத்திகளை வழங்கு கிறது. புதிய உருமாற்றத் திட்டத்துடன், விண்வெளித்துறையின் உற்பத்தி மதிப்பு மொத்தம் $4 பில்லியன் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிகால் அடைப்பால் தெம்பனிசில் வெள்ளம்

கட்டுமான நிறுவனம் ஒன்று வடி கால் மீது தற்காலிக சாலையை ஏற்படுத்தியிருந்ததால் தெம்பனி சில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தெம்பனிஸ் அவென்யூ 12க்கு அருகே அமைக்கப்பட்ட சாலையால் ஜன வரி 8ஆம் தேதி மழை நீர் வடிகாலி லிருந்து வழிந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தச் சாலையை கட்டுவதற்கு முன்பு கட்டுமான நிறுவனமான ஹுவா டியோங் முன் அனுமதி பெறவில்லை என்றும் கழகம் குறிப்பிட்டது.

தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்

படம்: திமத்தி டேவிட்

ப.பாலசுப்பிரமணியம்

தமிழ்ச் சமூகத்துடன் தொடர்பு களை வளர்த்துக்கொள்ளும் பல திட்டங்களில் ஒன்றாக கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு நேற்று ஒரு முக் கிய அடி எடுத்துவைத்தது. லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் தனது www.tllpc.sg என் னும் இணையத்தளத்தை அக்குழு அறிமுகம் செய்தது. அத்துடன், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடக இணைப்பையும் அது அதி காரபூர்வமாக அறிவித்தது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து இந்த அறிமுக நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கின.

நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நிறத் தெளிவின்மை

நீண்ட காலமாக நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு நிறத் தெளிவின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவால் ஏற்படக்கூடிய கண் பார்வை நோய் இல்லாத ஐந்தில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு நிறத் தெளிவின்மை ஏற்படுகிறது. பச்சை நிறத்தை நீல நிறமாகவும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தோடு மாறுபட்டு பார்க்க இயலாமலும் அவர்கள் இருப்பார்கள். அதனால் உட்புற வடிவமைப்பு, கட்டடக்கலை போன்ற துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

தோட்டக்கலையில் ஆர்வமுள்ளோருக்காக தயார்நிலையில் மேலும் ஐந்து பூங்காக்கள்

தோட்டக்கலையில் ஆர்வமுள் ளோருக் காக மேலும் ஐந்து பூங்காக்கள் தயாராகவுள்ளன. அவை பிடோக் நகரப் பூங்கா, சுவா சூ காங் பூங்கா, செங்காங் ரிவர்சைட் பூங்கா, யீ‌ஷூன் பூங்கா ஆகியன. தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. மேற்கூறப்பட்ட ஐந்து பூங்காக் களிலும் மொத்தம் 220 தோட்ட இடங்கள் வாடகைக்கு விடப்பட வுள்ளன. இரண்டரை மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் நீளமும் கொண்ட ஒரு தோட்ட இடத்திற்கு ஆண்டுக்கு $57 வாடகை செலுத்தவேண்டும்.

1866ஆம் ஆண்டுக்குப் பின் அரிய நிகழ்வு

இம்மாதம் 31ஆம் தேதி மூன்று நிலவுகளைக் காணும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படவுள்ளது. ‘ரத்த’ நிலவு, ‘நீல’ நிலவு, ‘சூப்பர்’ நிலவு ஆகியவை அந்த மூன்று நிலவுகளாகும். இதுபோன்ற வரிசையில் கோலங்கள் இதற்கு முன் 152 ஆண்டுகளுக்கு முன்னர் 1866 ஆம் ஆண்டு இருந்ததாகக் கூறப் படுகிறது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் அதில் ஒன்று. பூமியின் நிழலில் நிலவு நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சிவப்பாக இருக்கும் அந்த நிலவு ‘ரத்த நிலவு’ என்றும் அழைக்கப் படுகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு முழு நிலவும் ஒரு பருவத்தில் மூன்று முழு நிலவுகளும் வருவது உண்டு.

வெளிநாட்டு ஊழியர்களின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

மினி என்வைரன்மண்ட் சர்வீஸ் குழுமம் (எம்இஎஸ்) காக்கி புக்கிட் வட்டாரத்தில் அமைந்துள்ள அத னுடைய ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்காக பொங்கல் கொண்டாட்டங்களுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு மணிநேரம் நீடித்த இந்த கொண்டாட்டங்களில் இந் திய ஊழியர்களுடன் பங்ளாதேஷ், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 ஊழியர் கள் கலந்துகொண்டனர்.

Pages