‘நோ பால்’ சர்ச்சை: கிரிக்கெட் நடுவர் குத்திக் கொலை

கிரிக்கெட் விளையாட்டில் நடுவர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கட்டாக் மாவட்டத்தில் மன்ஹிசலந்தா என்னும் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.  

பிரம்மாபூர் அணிக்கும் ஷங்கர்பூர் அணிக்கும் இடையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. லக்கி ராவத் என்னும் 22 வயது ஆடவர் நடுவராக இருந்தார்.

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக நடுவர் சைகை காட்டினார். ஆனால், அது ‘நோ பால்’ இல்லை என்று பந்து வீச்சாளரும் களக்காப்பில் (ஃபீல்டிங்) இருந்த அணி விளையாட்டாளர்களும் நடுவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். 

வாய்ச்சண்டை திடீரென கைகலப்பாக மாறி மோதல் வெடித்தது. பந்து வீச்சாளரின் அணியினரும் எதிரணியினரும் மட்டையால் ஒருவரையொருவர் தாக்கினர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அணி வீரர் ஒருவர் நடுவர் லக்கி ராவத்தை கத்தியால் குத்தி விட்டார்.

அதனைக் கண்டு பதறிப்போன விளையாட்டாளர்கள், அவரை சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு நடுவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கத்தியால் குத்தியதாக ஸ்முதிரஞ்சன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இச்சம்பவம் மன்ஸிசலந்தா கிராமத்தில் பதற்றத்தைத் தூண்டியதால் கிராமத்தினருக்குள் மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது. அதனால் அங்கு ஏராளமான காவற்படையினர் குவிக்கப்பட்டனர். நடந்த சம்பவம் குறித்து விசாரணை தொடருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!