இவ்வாண்டு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள துறைகள்

கடந்த சில ஆண்டுகளில் தொழில் முடக்கம், வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்டவை நடந்த நிலையில், மற்றொருபுறம் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

போட்டித்தன்மைமிக்க சிங்கப்பூர் வேலைச் சந்தையில், வேலை வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் கல்வியும் திறன் மேம்பாடுகளும் வழிவகுக்கின்றன.

அதற்கு தனிப்பட்ட விருப்பமும் தொழில்துறை தேவைகளும் சந்திக்கும் வகையிலான பாடங்களையும் திறன்களையும் அடையாளம் காண்பது அவசியம்.

“தற்போதைய சூழலைக் கவனிக்கும்போது, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்டவற்றில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

“குறிப்பாக உணவுத் துறை, பயனர் சேவை போன்ற அதிக மனிதவளம் தேவைப்படும் துறைகளில் தானியங்கி முறையை அறிமுகம் செய்யும் பணிக்கு நிச்சயம் வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார் தனியார் நிறுவனம் ஒன்றின் மனிதவள இயக்க மேலாளர் விவேக் ஆனந்த் சிங்.

இவ்வாண்டில் தொழில்நுட்பம் தொடங்கி பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

தொழில்நுட்பத் துறை

சிங்கப்பூரில் அதிக தேவையுள்ள துறைகளில் முதலிடம் தொழில்நுட்பத் துறைக்கே. இணையப் பாதுகாப்பு, தரவுப் பகுப்பாய்வு, படைப்பாற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகிய நிபுணத்துவத்தை புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெரும்பாலும் எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நிதித் துறை

நிதித் துறையில், குறிப்பாக நிதித் தொழிநுட்பம், இடர் மேலாண்மை, நிதிப் பகுப்பாய்வு, ஒழுங்குமுறை இணக்கம் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகளை அதிகம் அளிப்பதாகத் தெரிகிறது.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் தொழில்நுட்பச் செயல்பாடுகளும் அத்துறையின் நிபுணர் தேவையை அதிகரித்துள்ளன.

‘ஹெல்த்கேர் இன்ஃபர்மேட்டிக்ஸ்’ எனும் சுகாதாரத் தகவல், மின்னிலக்கச் சுகாதார மேலாண்மை, மூத்தோர் பராமரிப்பு, சுகாதாரத் தரவு மேலாண்மை, பகுப்பாய்வு உள்ளிட்ட திறன்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

நீடித்த நிலைத்தன்மை, பசுமைத் திறன்கள்

அனைத்துல அளவில் முக்கிய பேசுபொருளாக இருப்பது நீடித்த நிலைத்தன்மை. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் பசுமைத் தொழில்நுட்பம், நிலையான நகர்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் மேலாண்மை உள்ளிட்ட திறன் உடையோருக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

படைப்பாற்றல் திறன்

செயற்கை நுண்ணறிவு, மனிதனின் வேலைவாய்ப்புகளை பறிக்கலாம் எனும் விவாதம் தொடர்ந்தாலும், மனித மூளையின் படைப்பாற்றல் திறனுக்கு நிகராக இருக்க முடியாது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அவ்வகையில் சந்தைப்படுத்தல், ஊடகத் துறை, சிக்கல் தீர்க்கும் ஆக்கபூர்வமான உத்திகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் தேவை அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!