காலங்கடந்து நிற்கும் குவீன்ஸ்வே தமிழர் கடைகள்

‘விளையாட்டுகளுக்கான பேரங்காடி’ என அழைக்கப்படும் பழமைவாய்ந்த குவீன்ஸ்வே பேரங்காடி, 1976ஆம் ஆண்டில் திறந்ததிலிருந்து இன்றுவரை பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

பல கடைகள் வந்துசென்றுள்ள நிலையில், சில தமிழர்களின் கடைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

அவ்வகையில், பூப்பந்து, ‘டென்னிஸ்’, ‘ஸ்குவாஷ்’ போன்ற மட்டை விளையாட்டுகளுக்கான பொருள்களை விற்றுவரும் தமிழர்க் கடைகளான ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’, ‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’, ‘நியூலிங்க் ஸ்போர்ட்ஸ்’ ஆகியவை 2000களிலிருந்து குவீன்ஸ்வேயில் செயல்பட்டு வருகின்றன. இன்று அவை ஒரே மாடியில் இயங்குகின்றன.

ஒரே இடத்தில், ஒரே வகையான பொருள்களை விற்கும்போது, அதுவும் இணைய வணிகங்கள் அதிகரித்துவரும் சூழலில், எவ்வாறு வர்த்தகங்களால் இப்போட்டிமிக்கச் சூழலைச் சமாளிக்க முடிகிறது?

பல விளையாட்டுக் கடைகளும் ஒரே கூரையில் இருப்பதால் வெகுதூரத்திலிருந்துகூட மக்கள் குவீன்ஸ்வேக்கு வருகின்றனர்.
அகமது ராஜாலி மரைக்காயர், 40, ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’

சேவைத் தரத்தால் விசுவாசம்

2008ல் தொடங்கப்பட்ட ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’ கடையைக் குடும்ப நிறுவனமாக அண்ணன், தந்தையுடன் நடத்திவரும் அகமது ராஜாலி மரைக்காயர், 40 (நடுவில்). படம்: ரவி சிங்காரம்

“ஒவ்வொரு கடைக்கும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

“கடைகளுக்கிடையே விலையளவில் போட்டித்தன்மை உள்ளது. வெவ்வேறு சலுகைகளையும் தரமான சேவையையும் வழங்கி மக்களை ஈர்க்கிறோம்,” என்றார் ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’ஸை நடத்தும் அகமது ராஜாலி மரைக்காயர், 40.

கயிற்றை மாற்றும் சேவைகளுக்காக வருவோரும் சேவைத் தரம் பிடித்ததால் கடையின் நற்பெயரைப் பரப்புவோரும் இணைய வணிகங்களோடு போட்டியிட இக்கடைகளுக்கு உதவுகின்றனர். படம்; ரவி சிங்காரம்

சமூக ஊடகங்களில் விளம்பரம்

‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’ அருகிலேயே இருக்கும் ‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’ கடை, 2003லிருந்து குவீன்ஸ்வேயில் இயங்கி வருகிறது. தந்தை ஷேக் முகமது தொடங்கிய வணிகத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றனர் அவரது புதல்வர்கள் முகமது தீன் மரைக்கார், 34, முகமது ஹஷீம் மரைக்கார், 21.

சமூக ஊடகங்கள்வழி தங்கள் கடையைப் பெரிதளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர் இச்சகோதரர்கள். ஏறக்குறைய இன்ஸ்டகிராமில் 24,000, யூடியூப்பில் 9,000, ஃபேஸ்புக் தளத்தில் 15,000, ‘டிக்டாக்’ தளத்தில் 1,43,500 ரசிகர்கள் எனப் பலரையும் கவர்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்களைக் கையாண்டு வணிகத்தை மேம்படுத்திவரும் ‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் முகமது தீன் மரைக்கார், 34 (இடது), முகமது ஹஷீம் மரைக்கார், 21. படம்: ரவி சிங்காரம்

தங்கள் சமூக ஊடகங்களைப் பார்த்துவிட்டு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர் தங்கள் கடையை நாடுவதாகக் கூறினர்.

‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் சகோதரர்கள் ஐரோப்பிய மட்டைக் கயிற்றுமாற்றுவோர் சங்கத்தின் (racket stringers association) சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

தொன்மையால் தனித்துவம்

குவீன்ஸ்வே பேரங்காடி 1976ல் திறக்கப்பட்டபோது, ஒரு கடையாகத் தொடங்கி இன்று மூன்று கடைகளாக விரிவடைந்துள்ளது ‘மஹபூப்’ நிறுவனம். படம்: ரவி சிங்காரம்

1976ல் குவீன்ஸ்வே பேரங்காடி திறக்கப்பட்டபோது ‘மஹபூப்’ நிறுவனம் அங்கே ஆடை, அணிகலன்களை விற்கும் கடையைத் திறந்தது. இன்று ‘குவீன்ஸ்வே’யில் மூன்று கடைகளாக விரிவடைந்துள்ளது.

‘சிங்கப்பூரில் மற்ற இடங்களில் கிடைக்காத ‘பிராண்டட்’ உடைகளை, அனைத்து அளவுகளிலும் நாங்கள் விற்பதால் மக்கள் தேடி வருகின்றனர்,” என்றார் இரண்டாம் தலைமுறையாக வணிகத்தை நடத்திவரும் மஜஹருதீன், 58.

குறைந்த மக்கள் நடமாட்டம், அடுத்த தலைமுறையினரின் நேரமின்மை, அதிகரித்த வாடகை போன்ற காரணங்களால் பல கடைகளும் மூடியுள்ளன.
மஜஹருதீன், 58, ‘மஹாபூப்’

வாடிக்கையாளர் ரசனையை அறிந்திருத்தல்

குவீன்ஸ்வே பேரங்காடி தொடங்கிய காலத்திலிருந்து நிலைத்து நிற்கும் ‘எஸ்ஏஹெச்’ விளையாட்டு நிலையம். படம்: இணையம்

குவீன்ஸ்வேயில் அதிகக் கடைகள் காலணிகளை விற்றாலும், “வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து காலணிகளை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதால் வணிகம் நிலைத்துள்ளது,” என்றார் ‘எஸ்ஏஹெச்’ விளையாட்டு நிலைய மேலாளர் அஹ்மது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!