சிங்க‌ப்பூர்

ஈசூனில் உள்ள புளோக் ஒன்றில் மூன்று மாடிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று ஏற்பட்ட மின்சாரத் தீச் சம்பவங்களால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மின்சார விநியோகம் 17 மணிநேரத்துக்கு தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டு விலை நிலையாவதற்கான கூடுதல் அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிம்ப்ளிகோ அம்சம் இல்லாத பெரியோருக்கான ஈசி-லிங்க் அட்டைகளையும் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளையும் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதற்காகக் குறைந்தது 2030ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
‘கிட்ஸ்டார்ட்’ எனப்படும் வசதி குறைந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடுத்த ஈராண்டுகளில் கூடுதலான பிள்ளைகள் உதவிபெறுவர்.