மாற்று நடிகர், பின்குரல் இன்றி சொந்தத் திறமையில் அசத்தும் நடிகர், நடிகையர்

மாற்று நடிகர், பின்குரல் இன்றி சொந்தத் திறமையில் அசத்தும் நடிகர், நடிகையர்

2 mins read
a101fab2-3daa-483a-acb3-c4d27e78c61b
சாய் பல்லவி. - படம்: பின்டர்ரஸ்ட்
Google News Preferred Icon

திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ எனப்படும் மாற்று நடிகரைப் பயன்படுத்தாமலும், சொந்தக் குரலிலேயே பேசியும் ஆபத்தான காட்சிகளில் துணிந்து நடித்தும் புகழ்பெற்ற நடிகர், நடிகையர் பலருள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல; அனைத்துலகத் திரைப்படங்களிலும் இப்படித் தங்களின் தனித்திறமையால் முன்னணி நடிகர், நடிகையர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கடினமான காட்சிகளில் துணிந்து நடித்த நடிகையர்

நடிகை ஐஸ்வர்யா ராய் ‘ராவணன்’ திரைப்படத்தில் ஆபத்தான காட்டுப் பகுதிகளிலும் அருவிக் காட்சிகளிலும் ‘டூப்’ இல்லாமல் நடித்தார். கத்ரீனா கைஃப், டாப்ஸி பண்ணு ஆகியோரும் தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுச் சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளனர்.

சொந்தக் குரலில் மிளிரும் நாயகிகள்

சாய் பல்லவி, நித்யா மேனன், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா பாலமுரளி ஆகிய முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் தங்களின் சொந்தக் குரலிலேயே பேசிக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, தங்களின் தனித்துவமான திறமையை நிரூபித்து வருகின்றனர்.

பன்முகக் கலைஞர்கள்

கமல்ஹாசன், விக்ரம் இருவரும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் ‘டூப்’ போடாமல் நடிப்பதோடு, பல்வேறு மொழிகளிலும் தங்களின் சொந்தக் குரலிலேயே பேசித் தங்களின் அபாரத் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

இந்தியச் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாகவும் நடிப்பு ரீதியாகவும் முன்னோடியாக விளங்கும் கமல்ஹாசன், ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘ஆளவந்தான்’, ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களில் ஆபத்தான சண்டைக் காட்சிகளைத் தாமே செய்தவர்.

‘அந்நியன்’, ‘ஐ’, ‘தங்கலான்’ போன்ற படங்களில் ஆபத்தான சாகசக் காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் நடிகர் விக்ரம் நடித்ததோடு, வெவ்வேறு குரல் வேறுபாடுகளுடன் சொந்தக் குரலிலேயே பேசியுள்ளார்.

அதிரடிச் சாகசங்களில் முன்னணி நடிகர்கள்

நடிகர் அஜித் குமார் ‘மங்காத்தா’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களில் தலைகீழாகக் கார் கவிழும் காட்சிகள், அதிவேக பைக் சாகசங்களை ‘டூப்’ பயன்படுத்தாமல் சொந்தமாகச் செய்தார்.

பாலிவுட்டில் வித்யுத் ஜாம்வால், அக்‌ஷய் குமார் ஆகியோரும் தற்காப்புக் கலைகளைப் பயின்று ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ இன்றி தாங்களே துணிந்து நடித்து வருகின்றனர்.

அனைத்துலக சாகச நட்சத்திரங்கள்

உலகப் புகழ்பெற்ற ஜாக்கி சான், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஆகியோர் மிகவும் ஆபத்தான சாகசக் காட்சிகளில் தாங்களே நடித்துச் சாதனை படைத்துள்ளனர்.

சாகசங்களின் பிதாமகனாகச் சொல்லப்படும் ஜாக்கி சான், ‘போலிஸ் ஸ்டோரி’ போன்ற படங்களில் ‘டூப்’ இல்லாமல் நூற்றுக்கணக்கான அடி உயரத்திலிருந்து குதித்து நடித்தவர்.

டாம் குரூஸ் ‘மிஷன் இம்பாசிபிள்’ தொடர் படங்களில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் தொங்குவது உள்ளிட்ட சாகசக் காட்சிகளில் தாமே நடித்தவர்.

குறிப்புச் சொற்கள்